Vidamuyarchi: அஜித் ஃபேன்ஸ் பி ரெடி!.. விடாமுயற்சி டீசருக்கு தேதி குறிச்சாச்சி!.. சீக்கிரம் விடுங்கப்பா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:02  )

Vidamuyarchi: வலிமை படத்திற்கு பின் அஜித் படமென்றாலே ஷூட்டிங் பல மாதங்கள் நடக்கும். படம் பற்றி ஒரு அப்டேட்டும் வெளியாகாது என்கிற நிலை உருவாகி விட்டது. அரசியல் தலைவர்கள் பிரச்சாரம், கிரிக்கெட் ஸ்டேடியம் என அஜித் ரசிகர்கள் பல இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது.

அந்த படத்திற்கு பின் அஜித் துணிவு படத்தில் நடித்தார். அந்த படம் 2023 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது. இதுவரை அஜித்தின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. துணிவுக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அது டிராப் செய்யப்பட்டு மகிழ் திருமேனி இயக்குனர் என அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக என்ன கதையை படமாக எடுப்பது என முடிவு செய்வதற்கே 6 மாதங்கள் போனது. இறுதியாக ஒரு ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்வது என முடிவெடுத்து விடாமுயற்சி படம் துவங்கப்பட்டு அஜர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக அர்ஜூன் என செய்திகள் வெளியானது.

ஆனால், படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை. அப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்க படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பொறுமையிழந்த அஜித் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டாகி நடிக்க துவங்கினார். அந்த படத்திலும் அஜித்துக்கு திரிஷாவே ஜோடியாக நடித்து வருகிறார்.

அதன்பின் ஒருவழியாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தததாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ஒரு பாடல் காட்சி இன்னும் எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, தீபாவளிக்கு இப்படம் வெளியாகவில்லை. பொங்கலுக்கு வெளியாகுமா என பார்த்தால் குட் பேட் அக்லி பொங்கலுக்கு என முடிவு செய்துவிட்டனர்.

எனவே, விடாமுயற்சி எப்போது முடித்து வெளியிடுவார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், வருகிற 10ம் தேதி இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி கசிந்திருக்கிறது. ஆனாலும், சுரேஷ் சந்திரா டிவிட் செய்தால் மட்டுமே இது நடக்குமா என்பது உறுதியாகும்.

Next Story