kanguva: பாலையா கேட்ட கேள்வி!... ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கதறி அழுத சூர்யா... வைரலாகும் வீடியோ..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:50  )

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது உருவாக்கி இருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். பீரியட் ஃபிலிமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் சூர்யாவின் கெரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் கங்குவா படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கின்றார் நடிகர் சூர்யா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கின்றார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் பாபி தியோல் நடித்திருக்கின்றார். கங்குவா படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவும் தமிழ்நாடு, பெங்களூர், ஹைதராபாத், கேரளா மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படம் குறித்து பிரமோஷன் செய்து வருகின்றார்.

மேலும் youtube சேனல்களுக்கும் இன்டர்வியூ கொடுத்து வருகின்றார். இதில் படம் மட்டுமல்லாமல் படத்தை தாண்டி பல விஷயங்களையும் பகிர்ந்து வருகின்றார் நடிகர் சூர்யா. சமீப நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் நடிகர் சூர்யாவின் வீடியோ தான் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருக்கும் பாலையா அன்ஸ்டாப்பபில் என்பிகே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார் நடிகர் சூர்யா. அதில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த சமயம் ஒரு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவை பலரும் பார்த்திருப்பீர்கள். சமீபத்தில் அகரம் அறக்கட்டளையின் மூலமாக பயின்ற மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த துயரம் குறித்து மேடையில் பேசியிருப்பார்.

அப்போது நடிகர் சூர்யா கண்ணீர் விட்டு அழுத்திருந்தார். அந்த வீடியோவை மீண்டும் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பியதும் சூர்யா அழத் தொடங்கி விட்டார். இதையடுத்து கூறியவர் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

அகரம் பவுண்டேஷனுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் பண உதவி மட்டும் ஸ்பான்சர் செய்து வருகிறார். அதில் பாதிக்கும் மேற்பட்ட தெலுங்கு மக்கள் அகரம் பவுண்டேஷனுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்த சமயத்தில் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார் நடிகர் சூர்யா.

Next Story