வெறித்தனமான லுக்கில் விஜய் சேதுபதி!.. வெளியானது விடுதலை 2 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:02:50  )
Viduthalai 2
X

Viduthalai 2

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் சீடரான இவர் பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ஆச்சர்யம் கொடுத்தார். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பின் மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை எடுத்தார். இதில், தனுஷுக்கு தேசிய விருதே கிடைத்தது. அதன்பின் விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமா உலகில் இருக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறினார் வெற்றிமாறன்.

பெரும்பாலும் நாவல்களை அடிப்படையாக வைத்தே வெற்றிமாறன் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கிய படம்தான் விடுதலை. இந்த படத்தில்தான் சூரி ஹீரோவாக மாறினார். மேலும், அந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. இப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் வெற்றி மாறன். கடந்த ஒரு வருடமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. வெற்றிமாறன் மிகவும் அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்துவார் என்பதால் இன்னமும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என சொல்லப்படுகிறது.

viduthalai2

முதல் பாகத்தில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது போல இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் இளமை காலம், அவர் எப்படி அரசை எதிர்த்து செயல்படும் போராளியாக மாறினார் என்பது காட்டப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

viduthali2

இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி நிற்கும் ஒரு போஸ்டரும், மஞ்சு வாரியருடன் நிற்கும் ஒரு போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

Next Story