டப்பிங் பணியை ஆரம்பித்த விடுதலை 2 டீம்! அடுத்த ரேஸ் ஆரம்பமாயிடுச்சு
தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் எடுத்த அத்தனை படங்களுமே நல்ல ஒரு வெற்றியை பெற்ற படங்களாகவே அமைந்திருக்கின்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்தார். கூடவே விஜய்சேதுபதி ஒருமுக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். முதன்முதலில் சூரியை ஹீரோவாக மாற்றியது வெற்றிமாறன் தான். இந்தப் படத்திற்கு பிறகு தான் சூரி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்த படக்குழு ஒரு 20 சதவீதம் மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறியது. இந்த நிலையில் இன்று விடுதலை இரண்டாம் பாகத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
சூரி மற்றும் விஜய்சேதுபதி டப்பிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படம் கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகமும் அதே மாதிரியான வெற்றியை பெறும் என எதிர்பார்க்கிறார்கள்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சொல்லப்படுகிறது. முதல் பாகம் முழுவதும் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இரண்டாம் பாகத்தில்தான் விஜய்சேதுபதி யார்? ஏன் இப்படி மாறினார் என்பது பற்றிய உண்மை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.