Categories: latest news

முதலுக்கே மோசமாகும் பிரதீப் ரங்கநாதன் படம்!.. புரடியூசருக்கு ஆப்பு வச்சிட்டாரே விக்கி!…

LIK Movie: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் பிரதீப் ரங்கந்தான். ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த அந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் 3 வருடங்கள் கழித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த திரைப்படம் லவ் டுடே. செல்போனை வைத்துக்கொண்டு இப்போதுள்ள 2கே கிட்ஸ் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை படம் போட்டு காட்டியிருந்தார்.

எனவே அந்த படமும் ஹிட் அடிக்கவே பிரதீப் ஹீரோவாக வெற்றி பெற்றார். எனவே, இனிமேல் தான் இயக்கும படங்களில் தானே ஹீரோ என முடிவெடுத்தார். லவ் டுடே ஹிட்டுக்கு பின் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கூட அவரை தேடி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

அதோடு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை மாஸ்டர், லியோ போன்ற படங்களை தயாரித்த லலித்குமார் தயாரித்தார். அதேபோல், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படமும் துவங்கப்பட்டது. டிராகன் படம் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் எல்.ஐ.கே படம் இதுவரை முடியவில்லை.

அதோடு டியூட் என்கிற படத்திலும் பிரதீப் நடிக்க துவங்கிவிட்டார். சொன்ன பட்ஜெட்டை விட விக்னேஷ் சிவன் அதிக செலவு செய்ததால் கடுப்பான லலித்குமார் ‘இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது’ என சொல்லிவிட, விக்னேஷ் சிவன் படத்தை கிடப்பில் போட்டார். அதன்பின் பேச்சுவார்த்தை நடந்து படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.

எல்.ஐ.கே படம் துவங்கப்பட்ட போது சொல்லப்பட்ட பட்ஜெட் 65 கோடி. அதன்பின் 5 கோடி அதிகரித்து 70 கோடியானது. இந்த படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படம் துவங்கப்பட்ட நாள் முதல் ரிலீஸ் தேதி வரை கணக்கிட்டால் 2 வருடங்கள் ஆகிறது. 70 கோடிக்கான வட்டி மற்றும் வெளியீட்டு செலவு எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த பட்ஜெட் 110 கோடியை தொடுகிறது. ஆனால், பிரதீப் ரங்கநாதனுக்கு அவ்வளவு வியாபாரமெல்லாம் இல்லை. எனவே, என்ன செய்வதென்றே தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்.

காதல் கலந்த ஃபேன்டஸி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago