டிராகன் ஹீரோவுக்கு டிராகுலாவாக மாறிய நயன்தாரா புருஷன்!.. ’காதல்’ பரத் கதைதான் ஞாபகத்துக்கு வருது!..

by ராம் சுதன் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் எல் ஐ கே. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு அஜித்துடன் புதிய படத்தில் இணைந்தார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் இவருடைய ஸ்கிரிப்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால் அந்த படத்தில் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன்.

அவருக்கு பதிலாகத்தான் மகிழ்திருமேனி உள்ளே வந்தார். அந்த படம் தான் விடாமுயற்சி. அது வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதன் பிறகு விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுக்கும் திரைப்படம் தான் எல் ஐ கே. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் திரைப்படம் தான் இது. முதலில் இந்த படத்திற்கு எல் ஐ சி என்று தான் பெயரிடப்பட்டது.

அதன் பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டு எல் ஐ கே என மாறியது. இந்த படத்தை லலித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தில் தீமா தீமா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இடையில் இந்த படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததையும் விட அதிகமாக போனதால் விக்னேஷ் சிவன் மற்றும் லலித் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஒரு செய்தி வெளியானது.

இன்னும் இந்த படத்திற்கான காட்சிகள் படமாக்கப்படும் நிலையில் விக்னேஷ் சிவனைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் எஸ் ஜே சூர்யா, சீமான் என ஒரு பெரிய இயக்குனர்கள் இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் சில காட்சிகளை படமாக்குவது இவர்களுக்கே புரியவில்லையாம். இவர் என்ன எடுக்கிறார்? எப்படி எடுக்கிறார் என்பதே அவர்களுக்கு புரியவில்லையாம் .

படப்பிடிப்பில் பலபேர் குழம்பி தான் இருக்கிறார்களாம். அப்படி என்னதான் எடுக்கிறார் என்று விசாரிக்கும் பொழுது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஏன் விக்னேஷ் சிவன் எடுப்பதில் இவர்களுக்கு சந்தேகம் வருகிறது என்றால் அவர் எடுக்கும் ஜானரே இந்திய சினிமாவிற்கு புதுசு என்கிறார்களாம். முதல்முறையாக இந்த ஜானரை கொண்டு வந்திருக்கிறாராம்.

இதற்குப் பெயர் futuristic science fiction romantic comedy என்பது பெயராம். பொதுவாக இந்த வகையான ஜானர் ஹாலிவுட் படங்களில்தான் முயற்சி செய்திருக்கிறார்களாம். முதல் முறையாக தமிழில் விக்னேஷ் சிவன் இதை முயற்சி செய்கிறார் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால் இதே மாதிரி அடுத்தடுத்து பல படங்களில் இதை பயன்படுத்தலாம் என சொல்கிறார்களாம். இதை அறிந்த ரசிகர்கள் எடுக்கும் போதே படம் புரியவில்லை என்றால் படம் பார்க்கிறவர்களுக்கு எப்படி புரியும் ப்ரோ என கமெண்ட்டில் கூறி வருகின்றனர்

Next Story