Vijay tvk: அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே கருப்பு பணம் அதிகமாக புலங்கும். பெரிய நடிகர்களில் கமல், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற சிலர் மட்டுமே என்ன சம்பளம் வாங்குகிறார்களோ அதற்கு சரியாக வரி கட்டுவார்கள். மற்றவர்கள் சரியான கணக்கு மாட்ட்டார்கள். அதாவது, சம்பளத்தை குறைவாக காட்டுவார்கள்.
அரசை ஏமாற்ற குறிப்பிட்ட தொகையை செக்காக வாங்கி வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு, மீதியை ரூபாய் நோட்டுகளாக வாங்கி கொள்வார்கள். எனவே, அந்த தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை. இதை பெரும்பாலான நடிகர்கள் செய்வார்கள். ரஜினி கூட பல வருடங்கள் அப்படித்தான் சம்பளம் வாங்கினார்.
சில வருடங்களுக்கு முன்பு வரி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கையும் அவர் சந்தித்தார். இதேபோல், வெளிநாட்டு காரை இறக்குமதி செய்தற்காக வரி கட்டாமல் இருந்த விஜய் அதற்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடி நீதிபதியிடம் குட்டு வாங்கினார். சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் ஆவேசமாக பேசினார்.
திராவிடம் என சொல்லி மக்களை ஏமாற்றி ஊழல் செய்யும் கரப்ஷன் கபடதாரிகள் என ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து அவர்கள்தான் தன்னுடைய அரசியல் எதிரி எனவும் விஜய் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், விஜயின் புலி படம் வெளியான சில தினங்களில் அவரிடம் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது, 15 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லை என விஜயே ஒப்புக்கொண்டது வரிமான வரி சோதனை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதை சிலர் இணையத்தில் பகிர்ந்து ‘கருப்பு பணம் வாங்கி ஊழல் செய்த விஜய் எப்படி ஊழலை ஒழிப்பார்?’ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த மாநாட்டில் விஜய் அதிரடியாக பேசியதற்கு பின் பல வகைகளிலும், பல தகவல்களையும் தேடி கண்டிபிடித்து சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் நடத்தும் மதுபானக்கடையின் புகைப்படத்தை வெளியிட்டு ‘மதுவை ஒழிப்போம் என சொல்லும் விஜயின் சொந்த கட்சியில் ஒருவர் பார் நடத்துகிறார்’ என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…