விஜய் டிவி டீமுக்கு மிரட்டல் விட்ட விஜய் மற்றும் எஸ்.ஏ.சி… ஷாக் கொடுத்த பிரபலம் வைரலாகும் வீடியோ!
Vijay: கருத்து சுதந்திரம் குறித்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகத்தின் மூலம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருடைய பழைய விஷயம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாக தொடங்கி இருக்கிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார். விரைவில் தன்னுடைய ஜனநாயகன் திரைப்படத்தை முடித்துக் கொண்டு முழு நேர அரசியல்வாதியாக தன்னுடைய வேலையை ஆரம்பிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரபல ஊடகத்தின் வலைதளத்தை கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சிலர் முடக்கினர். இதற்கு ஆதரவாக நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் மூலம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து விஜயின் பழைய சில விஷயங்களை எதிரணி தற்போது கிளறி விட்டிருக்கிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான லொள்ளு சபா நிகழ்ச்சி பல வருடங்களுக்கு முன்னர் மிகப் பிரபலமாக இருந்தது. சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஸ்பூஃப் என்ற பெயரில் கலாய்ப்பது வழக்கமாக வைத்திருந்தனர். அது ரசிகர்களிடமும் வரவேற்பை பெறும்.
அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தை பேக்கரி என்று ஒரு எபிசோடில் கலாய்த்திருந்தனர். இதில் கடுப்பான இயக்குனர் மற்றும் விஜயின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் அந்த டீமை கூப்பிட்டு மிரட்டி இருக்கிறார். இயக்குனர் ஒரு கட்டத்தில் தான் ஊரில் இல்லை. அசிஸ்டன்ட் இப்படி செய்து விட்டதாக சமாளித்து இருக்கிறார்.
மேலும் விஜய் டிவியின் பெயரை ஸ்டார் தமிழ் என மாற்ற இருந்ததாகவும், நடிகர் விஜய்க்காக தான் அதை இதே பெயரில் வைத்திருப்பதாகவும் ஐஸ் வைத்திருக்கின்றனர். பின்னர் விஜயை பாராட்டி ஒரு விழா எடுத்து அதில் நடிகர் ஜீவா எம் ஜி ஆர் போல் நடித்து விஜய் பாராட்டி பேசி இருக்கிறார். அதைத்தொடர்ந்தே விஜய் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் சமாதானம் ஆகி இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து காமெடி நடிகர் ஜீவாவிற்கு தன்னுடைய படம் ஒன்றில் நடிகர் விஜய் வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து லொள்ளு சபா நிகழ்ச்சியின் நடிகர் சுவாமிநாதன் பேசியிருக்கும் பழைய வீடியோக்கள் தற்போது இணையத்தில் தொடர்ச்சியாக வைரல் ஆகி வருகிறது.