Categories: latest news

வித்தியாசமான கெட்டப்பில் வந்த விஜய்ஆண்டனி! களைகட்டும் ‘மார்கன்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழா

விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட விஜய் ஆண்டனி சமீப காலமாக ஹீரோவாக பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் .

இது சுமாரான வரவேற்பையே பெற்றது. அதற்கு அடுத்தபடியாக லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார். இவர் இன்று நேற்று நாளை, சூது கவ்வும் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றியவர். இப்போது இயக்குனராக மார்கன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மகாநதி சங்கர், சமுத்திரக்கனி ,பிருத்திகா போன்ற பலர் நடித்துள்ளனர்.

இதில் விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இ்ந்தப் படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றன. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று நடைபெற இருப்பதால் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த விழாவிற்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். அதில் விஜய் ஆண்டனி முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து இறங்கி இருக்கிறார்.

ஒரு பக்கம் கருப்பு நிற பெயிண்டை உடல் முழுவதும் அடித்துக் கொண்டு இந்த ட்ரெய்லரில் வித்தியாசமாக வந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதுவும் படத்திற்கான புரோமோஷன் ஆக பார்க்கப்படுகிறது. படத்திற்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் விஜய் ஆண்டனி இந்தப் படத்திலும் இதுவரை இல்லாத வகையில் புதுவிதமான கெட்டப்பில் வருகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago