விஜய் ஆண்டனி இல்லன்னா யாரு அந்த கருப்பு ஆடு?!.. தீராத ‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்து
சவுண்ட் என்ஜினியராக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையும் இவருக்கு வந்தது.
இவர் நடிக்கும் படங்களை இவரே தயாரித்தார். அப்படி முதலில் வெளியான ‘நான்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை பெற்றது. அடுத்து நடித்த சலீம் படமும் ஓடிவிட்டது. அடுத்து வெளியான இந்தியா - பாகிஸ்தான் படம் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதன்பின் வெளியான பிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்தாக சொல்லப்பட்டது. அதன்பின் சில படங்களில் நடித்தார். இதில், தமிழரசன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்றது. தான் நடிக்கும் படங்களில் எடிட்டிங்கில் தலையிடுவதை விஜய் ஆண்டனி வழக்கமாக கொண்டிருக்கிறார் என்கிற புகார் அவர் மீது உண்டு.
ரோமியோ படம் ரசிகர்களை கவராமல் போனதற்கு காரணமே விஜய் ஆண்டனிதான் என புளூசட்ட மாறன் போன்றவர்கள் நக்கலடித்தார்கள். விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் முதல் ஒரு நிமிட காட்சியை தனக்கு தெரியாமலே இணைத்து விட்டனர் என விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டு புலம்பி இருந்தார்.
அதோடு, ‘அந்த ஒரு நிமிட காட்சி படத்தின் போக்கையே மாற்றிவிட்டது. தயவு செய்து அதை மறந்துவிட்டு படத்தை பாருங்கள்’ எனவும் அவர் கோரிக்கை வைத்தார். எனவே, அந்த ஒரு நிமிட காட்சியை சேர்த்தது விஜய் ஆண்டனிதான் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. பலரும் அப்படித்தான் நம்பினார்கள்.
இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தில் வரும் 2 நிமிட காட்சியை தனக்கு தெரியாமல் யாரோ இணைத்துள்ளதாக என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை’ என விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருகிறார்.
இயக்குனரும் செய்யவில்லை. விஜய் ஆண்டனியும் செய்யவில்லை எனில் தயாரிப்பாளர் தரப்பு செய்து விட்டார்களா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.