அருவி படத்தை இயக்கிய அருண் புருஷோத்தமன் இப்போது சக்தி திருமகன் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் ஹீரோ விஜய் ஆண்டனி. காதல் ஓவியம் படத்தில் கதாநாயகனாக நடித்த கண்ணன் அந்தப் படத்திலே முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1982ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் காதல் ஓவியம். இந்தப் படத்தில் கண்ணன் ஹீரோவாக நடித்துள்ளார். கண்தெரியாதவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார். இதுதான் அவருக்கு முதல் படம் என்றாலும் அந்த மாதிரி எதுவுமே தெரியாது. கதாநாயகியாக ராதா நடித்துள்ளார்.
படத்தில் ஜனகராஜ், கவுண்டமணி, காந்திமதி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. குயிலே குயிலே, அம்மா அழகே, நாதம் என் ஜீவனே, நதியில் ஆடும் பூவனம், பூஜைக்காக வாழும், பூவில் வண்டு, சங்கீத ஜாதி முதல்லை, வெள்ளிச் சலங்கைகள் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன.
பாடல் காட்சியில் கண்ணனின் பர்ஃபார்மன்ஸ் வெகு அருமையாக இருக்கும். இப்படி ஒரு அருமையான படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போனது தான் ஆச்சரியம். தமிழ்த்திரை உலகில் இந்த ஒரு படத்தில் மட்டும் தான் கண்ணன் நடித்துள்ளார்.
அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய் ஆண்டனியின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ 80ஸ் ஹீரோக்கள் கம்பேக் கொடுக்க ட்ரை பண்ணுகிறார்கள். ஆனால் முடியவில்லை. சமீபத்தில் கூட மோகன், ராமராஜன், கவுண்டமணி, வடிவேலு ட்ரை பண்ணினார்கள். ஆனால் பெரிய அளவில் அவர்களுக்கு வரவேற்பு இல்லை. அந்த வகையில் கண்ணன் கம்பேக் கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
காதல் ஓவியம் படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு கேப் என்ற கேள்விக்கு கண்ணன் சமீபத்தில் பதில் அளித்துள்ளார். அதில் காதல் ஓவியம் படத்துக்கு முன்னதாக பெங்காலி படம் ஒன்றுக்காக சென்றாராம். அந்தப் படத்தின் ஆடிஷனில் செலக்ஷன் ஆகவில்லையாம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாராம்.
அப்போதுதான் காதல் ஓவியம் படத்தில் நடிக்கும் சான்ஸ் அவருக்குக் கிடைத்ததாம்.இப்போது அவருக்கு 60 வயது. ஆனாலும் ஸ்மார்ட் லுக்காக இருக்கிறார். டீ கடையில் டீ குடித்த போது பாரதிராஜாவின் பார்வையில் பட்டுள்ளார் கண்ணன். அதன்பிறகு தான் காதல் ஓவியத்தில் நடிக்கும் வாய்ப்பை பாரதிராஜா அவருக்குக் கொடுத்தாராம்.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…