விஜய் அரசியல்ல நீடிக்க முடியாது... நடிகர் போட்ட அணுகுண்டு... என்ன தாம்பா சொல்றாரு?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:37  )

தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த தன் முதல் அரசியல் மாநில மாநாட்டில் முக்கால் மணி நேரம் பேசி அனைத்துக் கட்சியினரையும் வாயடைக்க வைத்து விட்டார். அவரது பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்ததாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தனது மொத்த கோப தாபங்களையும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசி அசத்தியுள்ளார். அவருடைய கோபமும் நியாயம் தான் என்று பலரும் சொல்லி வருகின்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணேப் வாழ்த்து தெரிவித்துள்ளார். துறவிகளும், சித்தர்களும் அதிகமாக வாழ்ந்த தமிழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி உள்ளார் விஜய். அவருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார்.

பொதுவாக சினிமாக்காரங்கன்னாலே கூத்தாடி என பலரும் கேவலமாகப் பேசுவாங்க. அவங்களுக்கு எல்லாம் அரசியல் தேவையான்னு சொல்வாங்க. அவங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

கூத்தாடிக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் விஜய் இப்படி பேசியுள்ளார். இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன். கூத்தாடி அப்படின்னா கேவலமான பெயரா? இல்ல கெட்ட வார்த்தையா? கூத்து அது சாதாரண வார்த்தை இல்ல. ஏன்னா கூத்து சத்தியத்தைப் பேசும்.

கொள்கையைப் பேசும். கோட்பாட பேசும். கோவத்தைப் பேசும். சோகத்தைப் பேசும். அரசியலைப் பேசும். அறிவியலைப் பேசும். நல்லதைப் பேசும். உள்ளதைப் பேசும். உண்மையைப் பேசும். உணர்வைப் பேசும். இதை எல்லாத்தையும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாம கொண்டாட்டமா பேசும் என பேசி அதிரவைத்தார்.

அந்தவகையில் நடிகர் கிளி ராமச்சந்திரன் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில், விஜய் சார் அரசியல்ல நீடிக்க முடியாது. ஏன்னா மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறாரு.

ஆனால் கூட நடித்த நடிகர்களுக்கு உதவி செய்ய எந்தப் பெரிய ஹீரோவும் முன்வரவில்லை. முதலில் கூட நடிக்கும் நடிகர்களுக்கு உதவுங்க. அப்புறம் மக்களுக்கு உதவுங்கன்னு தெரிவித்துள்ளார். இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Next Story