விஜய் வைத்திருக்கும் இண்டர்நேஷனல் விருது… மறக்காம இருக்க ஒரு ரீகேப்.. பாத்துரலாமா?

by ராம் சுதன் |

Vijay: பிரபல நடிகர் விஜய் வைத்திருக்கும் இண்டர்நேஷனல் விருது கொடுத்த தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கொடுத்து ஒன்றிய அரசு சிறப்பு செய்திருக்கிறது. இந்த செய்தி பரவத் தொடங்கியவுடன் அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்வதைவிட விஜயை கலாய்க்க தொடங்கியது தான் அதிகம்.

தற்போது நடிப்பிலிருந்து விலகி நடிகர் விஜய் தன்னுடைய அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என கட்சியை உருவாக்கி அதை வளர்த்தெடுக்கும் நோக்கில் அடுத்தடுத்து வேலைகளை செய்து வருகிறார். இந்த நேரத்தில் தான் அவருடைய போட்டி நடிகரான அஜித்திற்கு இப்படி ஒரு பெரிய கவுரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடிகர் விஜயிடம் இதைப்போன்று பெருமையான ஒரு விருது இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். அதுவும் நடிப்பிற்காகவே இண்டர்நேஷனல் பிரதான ஐரா விருது விஜய்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அவர் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்திற்கு என்பது தான் இங்கு சுவாரசியமான சம்பவமே.

2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு சிறந்த இண்டர்நேஷனல் நடிகருக்கான விருதை நடிகர் விஜய் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் இந்த விருது ரசிகர்களின் வாக்கெடுப்பில் கொடுக்கப்பட்டது என்பது தான் இங்கு மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய் மூன்று வருடங்களில் நடித்திருந்தார். எஸ் ஜே சூர்யா, வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்தியாமேனன் நடிப்பில் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story