பழிக்குப் பழி!.. வேட்டையனை அடித்து நொறுக்கிய விஜய் ஃபேன்ஸ்!.. அப்செட்டில் லைக்கா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:25  )

Vettaiyan: நடிகர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்களின் ரசிகர்களுக்குள் நிறைய போட்டியும், வன்மும் இருக்கிறது. டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு சென்று பார்த்தால் இது புரியும். ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

கடந்த சில வருடங்களாக விஜய் ரசிகர்களுக்கு எதிரியாக மாறினார் ரஜினி. அதற்கு காரணம் ஜெயிலர் பட விழாவில் அவர் சொன்ன காக்கா கழுகு கதைதான். காக்கா எவ்வளவு உயர பறந்தாலும் அதனால் கழுகின் உயரத்திற்கு செல்ல முடியாது என ரஜினி சொல்ல அவர் விஜயைத்தான் சொல்கிறார் என விஜய் ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள்.

அதன் விளைவு அப்போது முதல் இப்போது வரை சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ரஜினியை மோசமாக விமர்சிப்பது, அசிங்கமாக திட்டுவது, அசிங்கமான ஹேஷ்டேக் மூலம் ரஜினியை கிண்டலடிப்பது என தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதை விஜயும் கண்டு கொள்வதில்லை.

பீஸ்ட் படம் வெளியான போது அந்த படத்தை கிண்டலடித்து ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரோல் செய்தார்கள். இதனால் நெல்சனே அப்செட் ஆகி விஜயிடம் சாரி சொல்லும் அளவுக்கு போனது. ஆனால், அதே நெல்சனை வைத்து ஜெயிலர் ஹிட் கொடுத்தார் ரஜினி. அந்த கோபத்தைத்தான் விஜய் ரசிகர்கள் வேட்டையன் வெளியான போது காட்டினார்கள்.

அசிங்கமான ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து வேட்டையன் படத்தை ஒரு வழி செய்துவிட்டனர். படம் வெளியாகி 4 நாட்களில் வேட்டையன் படம் 240 கோடி என லைக்கா நிறுவனம் அறிவித்தது. ஆனால், அது பொய். 180 கோடி மட்டுமே வசூல் என டிரெண்டிங் செய்தார்கள்.

இதனால் வேட்டையன் படத்திற்கு பெரிய வசூல் இல்லாமல் போனது. 4 நாட்களுக்கு பின் இப்படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. ஆனால், மழை வந்து படத்தின் வசூலை பாதித்தது. ஏற்கனவே தர்பார், லால் சலாம், இந்தியன் 2 என தோல்வி படங்களை கொடுத்து நஷ்டமடைந்த லைக்கா வேட்டையன் படத்தை பெரிதாக நம்பியிருந்தது. ஆனால், விஜய் ரசிகர்களால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Next Story