Cinema News
விஜயகாந்த் வழியில் விஜயா? பக்காவா தயாராகும் வீடியோ.. இது மட்டும் அரசியல் இல்ல பாஸ்
தற்போது விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உள்ளது. அதுவும் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாக கூடிய திரைப்படம் என்பதால் அரசியல் சம்பந்தப்பட்ட சில அம்சங்கள் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .ஏற்கனவே விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அரசியல் ரீதியாக சில பிரச்சினைகளை அவருடைய படங்கள் எதிர் கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட பிறகு அவருடைய நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இன்னும் அதிகமான பிரச்சனைகள் இந்த படத்திற்கு எழும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் மிகவும் தைரியமாக அவர் அரசியலில் கால் எடுத்து வைத்து விட்டதால் எந்த பிரச்சனை ஆனாலும் பரவாயில்லை எதையும் எதிர்கொள்ள தயார் என்ற மனநிலையிலும் இப்போது விஜய் வந்துவிட்டார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோட் திரைப்படம் பெரிய அளவில் வசூலை அள்ளியது. விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் விஜய் மற்றும் வி டிவி கணேஷ் காம்பினேஷனில் ஒரு காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
விடிவி காம்போ என்றாலே அது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். பீஸ்ட் படத்தில் தொடங்கி கோட் திரைப்படம் வரை இவர்கள் இரண்டுபேர் காம்பினேஷனில் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இந்த படத்திலும் விடிவி கணேசனுடன் ஒரு காம்பினேஷனில் நடித்திருக்கிறாராம் விஜய். அதுவும் பூத் கமிட்டி பற்றி இவர்கள் இரண்டு பேரும் பேசுவது போல அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
இதைப் பற்றி தெரிந்த கோடம்பாக்கத்தினர் சில பேர் பூத் கமிட்டி மட்டுமே அரசியல் என நினைத்து விட்டார் போல விஜய். இவர் கட்சி தொடங்கியதிலிருந்து பூத் கமிட்டி மீதுதான் இவருடைய கண் இருக்கிறது என கூறி வருகிறார்கள். அது மட்டுமல்ல விஜயகாந்துக்கு எப்படி ராஜ்ஜியம் திரைப்படம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன் வெளியானதோ அதேபோல இந்த படமும் அப்படித்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது .ராஜ்ஜியம் படத்தில் தான் விஜயகாந்த் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அரசியல் சம்பந்தப்பட்ட சில வசனங்களையும் அந்த படத்தில் மிக தைரியமாக பேசினார். அப்படி ஜனநாயகன் படத்திலும் விஜயின் வசனங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.