நம்ம மட்டும் நல்லா இருந்தா சுயநலமில்லையா..? கடைசில ரஜினியையும் விட்டு வைக்கல போலயே..!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கி இருக்கின்றார். தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் நேற்று தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கின்றார். மாலை 4 மணிக்கு ஆரம்பித்து ரேம் வாக் தொடங்கி, கட்சி கொடி ஏற்றி, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து உறுதி மொழி எடுக்க வைத்தார்.
பின்னர் தனது 48 நிமிடம் உரையையும் முடித்து குறைவான நேரத்தில் பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்து விட்டார் நடிகர் விஜய். ஆனால் அவர் கூற வந்த கருத்து, யார் யாரை எவ்வளவு அட்டாக் செய்ய வேண்டுமோ அவ்வளவும் உணர்ச்சி பொங்க பேசி முடித்திருந்தார். சொல்வதைக் காட்டிலும் செயலில் காட்டுவது தான் முக்கியம் என்று பலவிதமான கருத்துக்களை நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசியிருந்தார்.
வரும் காலங்களில் விஜயின் செயல்பாடுகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை பார்த்து தான் மக்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவெடுப்பார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கு பலரின் ஆதரவு இருந்தாலும் ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெற தவறி விட்டார் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் மாநாட்டில் மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை அவர் தாக்கி பேசியிருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நடிகர் விஜய்க்கு முன்னதாகவே அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். நிச்சயம் அரசியல் பிரவேசம் செய்வேன் என்று கூறினார். ஆனால் பல வருடங்களாக அரசியலுக்கு வர போகிறேன் என்று பில்டப் மட்டுமே கொடுத்தாரே தவிர அரசியலுக்கு வரவில்லை.
உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டார். தொடர்ந்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் நடிகர் விஜய் இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு, நம்ம பேசாம நடிச்சோமா நாலு காசு பார்த்தோமானு இருக்கலாம் அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா நம்ம மட்டும் நல்லா இருந்தா அது சுயநலம் இல்லையா?
நம்மள வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும் இல்லையா? காசு சம்பாதிச்சு என்ன செய்யப் போகிறோம். நம்ம மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று ஏகப்பட்ட கேள்வி வந்தது. அதற்கு பதில் தான் அரசியல் என்று விஜய் பேசியிருந்தார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவர் மறைமுகமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.
அவர் அவரின் ரசிகர்களுக்கும், அவரை வாழவைத்த தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்று மறைமுகமாக ரஜினிகாந்தை தாக்கி பேசி இருக்கிறார் என ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு எதிராக தொடர்ந்து ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்கள்.