கோட்டில் இந்த ஒன்னு மட்டும் தப்பிச்சதுக்கு காரணம் தளபதியா?… நேரம் நல்லா இருந்து இருக்கு போல!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:38  )

GOAT: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் நடந்த சுவாரசிய விஷயம் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, அஜ்மல், சினேகா, பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் எடுத்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முதல் பாடலாக விசில் போடு வெளியானது. பொதுவாக விஜயின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். ஆனால் விசில் போடு பெரிய அளவிலான ரசிகர்களை கவரவில்லை என்பதை உண்மை.

அதை தொடர்ந்து வெளியான ஸ்பார்க் பாடலும் இதேபோல ரசிகர்களிடம் தோல்வியை மட்டுமே தழுவியது. இப்பாடல்களுக்கு இடையே விதிவிலக்காக மற்ற பாடல் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் முதலில் யுவன் சங்கர் ராஜா கிளைமாக்ஸுக்கு அந்த பாடலை முடிவு செய்யவில்லையாம்.

அவர் வேறு இரண்டு பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறார். ஆனால் அதைக் கேட்ட பட குழுவிற்கு திருப்தி ஏற்படவில்லையாம். விஜய் எனக்கு யுவனின் ஸ்டைலில் மட்டுமே ஒரு பாடல் வேண்டும் என வலுக்கட்டாயம் செய்து கேட்டிருக்கிறார்.

அவர் கேட்டதை புரிந்து கொண்ட யுவன் அதைத் தொடர்ந்து மற்ற பாடலை இயக்கியதாக தெரிவித்திருக்கிறார். கடைசியில் விஜய் கேட்ட பாடல் மட்டுமே அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. பேசாம எல்லா பாடலையும் விஜய்யின் ஐடியாவிலேயே கொடுத்து வாங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Next Story