பாகுபலி படம் மாதிரி எதிர்பார்த்து புஷ்ஷுனு போயிடுச்சு.. விஜய் பட தோல்விக்கு இதுதான் காரணம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:13  )

விஜயின் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் எத்தனையோ தோல்வி படங்களும் வெளிவந்திருக்கின்றன. வெற்றி தோல்வி என இரண்டையும் சரிசமமாக பார்த்தவர் விஜய். அவருடைய சினிமா கேரியரில் மிகவும் விமர்சிக்கப்பட்ட படமாக அமைந்தது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படம்.

சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் விஜய் ஸ்ரீதேவி ஸ்ருதிஹாசன் ஹன்சிகா பிரபு கிச்சா சுதீப் போன்ற எண்ணற்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நடிகர் நட்டி பணியாற்றி இருந்தார்.

இந்தப் படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு சென்றடையவில்லை. சராசரிக்கும் குறைவான பாக்ஸ் ஆபிஸ் முயற்சியாக இருந்தாலும் தனது 100 கோடி முதலீட்டை சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளில் லாபம் ஈட்டியது. அந்த காலத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படமாக புலி திரைப்படம் அமைந்தது .

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்த பிரச்சினையைப் பற்றி ஒரு பேட்டியில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி கூறி இருக்கிறார். முதலில் இந்த படத்தின் கதையை நட்டியிடம் விஜய் சொன்னபோது ‘பத்து வயதிலிருந்து 17 வயது வரைக்கும் உள்ள சிறுவர்களுக்கு என் படம் மூலமாக நான் எதையும் சொல்லவில்லை.

இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும் .இதுவரை ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே ஈர்த்து இருக்கிறேன். இந்த படத்தின் மூலம் அந்த வயதுக்குட்பட்டவர்களையும் ஈர்க்க முடியும்’ என்று கூறினாராம். அதனால் இந்த படத்தின் கதையை கேள் எப்படி இருக்கிறது என்று சொல் என நட்டியிடம் விஜய் சொல்லி இருக்கிறார்.

நட்டியும் இந்த படத்தின் கதையை கேட்டு அவருக்கும் பிடித்து விட்டதாம். பேசும் ஆமை பறக்கும் தவளை என சிறுவர்களை ஈர்க்கும் படமாக இது கண்டிப்பாக இருக்கும். அதனால் அந்த சிறுவர்கள் மூலம் குடும்பங்களும் படத்தை கொண்டாட வருவார்கள் என எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இந்த படத்தை பப்ளிசிட்டி செய்யும் போது ஒரு ஆக்சன் படமாக செய்துவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான நேரம். அதனால் அந்தப் படத்தை போல புலி படத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் போனதுதான் இந்தப் படத்தில் உள்ள பிரச்சனையே என நட்டி கூறினார்.

Next Story