Categories: latest news

விஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்புல நடந்த அதிசயம்..! இப்படியும் நடக்குமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற படம் மகாராஜா. தொடர்ந்து விடுதலை படத்தின் இரு பாகங்களிலும் நடித்தார். தொடர்ந்து இப்போது ஏசிஇ மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படங்களில் நடித்து வருகிறார். பசங்க இயக்குனர் பாண்டிராஜூடன் முதல் முறையாக இணைந்து படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான அப்டேட்கள் என்னன்னு பார்க்கலாமா…

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் இயக்குனர் பாண்டிராஜூக்குத் திருப்புமுனையாக அமைந்ததா என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் பாண்டிராஜூக்கு மட்டும் இல்ல. விஜய் சேதுபதிக்கே திருப்புமுனையைக் கொடுக்குற படமாகத் தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். அந்தளவுக்கு உணர்ச்சிகரமான காட்சிகளை அமைத்துள்ளார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.

அந்தப் படத்தின் படப்பிடிப்புல நானும் கலந்து கொண்டேன். ஒரு உணர்ச்சிமயமான காட்சியில் விஜய்சேதுபதியும், நித்யா மேனனும் நடித்தபோது அந்தப் படப்பிடிப்பு தளத்துல பலபேரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை என்னால் பார்க்க முடிந்தது என்கிறார் சித்ரா லட்சுமணன்.

2024ல் மகாராஜா படம் இங்கு மட்டும் அல்லாமல் சீனா வரை சென்று அங்கும் நல்ல வசூலை ஈட்டியது. மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தின் கதையும் மாஸாக இருந்தது. அந்த வகையில் விஜய் சேதுபதி படங்களின் வெற்றிக்குக் காரணம் அவர் கதையைத் தேர்ந்தெடுக்கும் விதம்தான். அவருக்கு ஒத்து வருகிற கேரக்டர்களில் தான் அவர் நடிக்கிறார். இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

அதனால் அவரது படங்கள் எளிதில் ரசிகர்களைச் சென்று அடைகின்றன. விஜய்சேதுபதி சினிமாவில் மட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் எத்தனையோ எதிர்ப்புகள் இடையிடையே வந்தாலும் திறம்பட செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago