விஜய் சேதுபதி செய்த தரமான சம்பவம்!.. அதிர்ந்து போன படக்குழு!.. இப்படியெல்லாம் நடக்குமா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:40  )

Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் 7 படங்கள் வரை நடித்த ஹீரோக்கள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட் ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் செய்த தரமான சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கூத்து பட்டறையில் அக்கவுண்ட்டடாக இருந்து கோலிவுட்டில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு முதலில் பெரிய அளவிலான வாய்ப்புகள் அமையவில்லை. சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் வில்லனாக கோலிவுட்டில் முக்கிய இடம் பிடித்தார்.

இதை தொடர்ந்து பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூது கவ்வும் என வரிசையாக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் பணம் சம்பாரிக்க வந்தேன் என்பதற்காக கிடைக்கும் எல்லா படங்களையுமே நடித்தார்.

சின்ன கேமியோ ரோலை கூட வந்தால் விடாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு மக்கள் செல்வன் என்ற அடையாளமும் கிடைத்தது. இந்த நிலையில் தான் அவருக்கு அசோக் செல்வன் - ரித்திகா நடித்திருந்த ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி கடவுள் கேரக்டரில் எக்ஸ்டண்டட் கேமியோ செய்திருப்பார்.

படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் அவர் வருவது போல் இருந்தாலும், தனது போர்ஷன்களை கிட்டத்தட்ட ஒரே நாளிலேயே முடித்தாராம் விஜய் சேதுபதி. முதல்நாள் காலை 9 மணி தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரையில் தொடர்ச்சியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்த படக்குழு ஆச்சரியத்தில் அதிர்ந்துவிட்டனராம். அப்படி தொடங்கிய அவர் பயணம் இன்று தமிழ் பிக்பாஸை தொகுத்து வழங்கும் அளவுக்கு அவரை அழைத்து வந்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story