4 ஹீரோக்கள் ரிஜெக்ட் பண்ண கதை அது!.. ஹிட் படம் பற்றி பேசும் விஜய் சேதுபதி!...

by ராம் சுதன் |

Vijay sethpuathi: தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோயிசம், அழகான கதாநாயகி, 4 பாட்டு, 4 சண்டை என ஒரே ஃபார்முலாவுக்குள் முன்னணி நடிகர்கள் இருக்கும் போது வித்தியாசமான கதை, கதாபாத்திரம் ஆகியவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. சினிமாவில் வளரும் நேரத்தில் யாரும் சூது கவ்வும் போன்ற ஒரு கதையில், அதுவும் பெண்களை கடத்தும் வேலையை செய்யும் ஒரு வேடத்தில் நடிக்கவே மாட்டார்கள். ஆனால், விஜய் சேதுபதி நடித்தார்.

கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும். எந்த மாதிரியான வேடத்திலும் நடிப்பார். வில்லனாக கூட சில படங்களில் நடித்திருக்கிறார். மாஸ்டர், விக்ரம், ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்களில் வில்லனாக அசத்தி இருக்கிறார். கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த வேடத்தை எந்த முன்னணி நடிகரும் செய்ய மாட்டார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத வேடம் அது. அந்த துணிச்சலும், ஆர்வமும் விஜய் சேதுபதிக்கு மட்டுமே உண்டு. இதை அவர் பலமுறை நிரூபித்திருக்கிறார். விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான்.

தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் ஊடகமொன்றில் பேசிய விஜய் சேதுபதி ‘விக்னேஷ் சிவன் எப்பவும் ஸ்பெஷல். அவனை போல ஒரு கதையை மற்ற இயக்குனர்கள் எழுத முடியாது. காத்து வாக்குல ரெண்டு காதல் படம் போல ஒரு கதையை மற்றவர்களால் எழுத முடியாது. யோசிக்கவும் முடியாது.

4 ஹீரோக்கள் ரிஜெட் செய்த கதைதான் நானும் ரவுடிதான். அவனை நம்பி நீங்கள் போய்விட்டால் அவன் அதற்குள் சில மேஜிக்கை உருவாக்குவான். பலருக்கும் அது புரியாது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

Next Story