ரொம்ப திமிரா இருந்தேன்… ஒருநாள் அது புரிந்தது.. விஜய் சேதுபதி சொன்ன சம்பவம்..!

Published on: March 18, 2025
---Advertisement---

Actor Vijaysethupathi: ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கின்றார் நடிகர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுக்கக்கூடிய நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.

கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு வில்லன், கதாபாத்திரம், வயதான கதாபாத்திரம் என எந்த ஒரு வேடத்தை கொடுத்தாலும் அதில் மிகச் சிறப்பாக நடிக்கக்கூடிய ஒரு நடிகர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரக்கூடிய நடிகர் விஜய், ரஜினி, கமல் தொடங்கி பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் ஷாருக்கான் வரை பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

இதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. ஹீரோ கதாபாத்திரம் குறைந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வந்ததால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தார் விஜய் சேதுபதி. அதன்படி தனது 50வது படமான மகாராஜா திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விஜய் சேதுபதியை மீண்டும் ஹீரோவாக தரம் உயர்த்தி இருக்கின்றது. மகாராஜா திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் சக்க போடு போட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய புகழை அடைந்திருக்கின்றார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தனது கைவசம் ஏஸ், டிரைன் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு புரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னுடைய ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதை நான் விக்னேஷ் சிவனிடம் காட்டினேன். இந்த படம் உங்களின் நடிப்பை மேம்படுத்துமே தவிர வியாபார ரீதியாக உங்களை மேம்படுத்தாது என்று கூறினார். அதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

மேலும் நான் நல்ல படங்களை செய்கின்றேன். அதில் சந்தோஷமாக இருக்கின்றேன் என்று நான் சொன்னேன். அதுவே பல வருடங்கள் கழித்து ஒரு விநியோகிஸ்தர் என்னை பார்த்து நீங்கள் நல்ல படங்களை செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் மக்களுக்காக படம் செய்ய வேண்டும் என்று சொன்னார். உடனே அவரிடம் நான் மக்களுக்காக அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் படம் செய்கின்றேன் என்று சொன்னேன்.

ஆனால் 10 வருடம் கழித்து எனக்கு அது புரிய வந்தது. நாம் என்ன தவறு செய்தோம் என்பது, வாழ்க்கை சில நேரங்களில் சில பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும். ஆனால் அதை அப்போது நாம் புரிந்து கொள்ள மாட்டோம். சில வருடங்கள் கழித்து தான் நாம் செய்த தவறை எண்ணி வருந்துவோம். அப்படித்தான் எனக்கும் 10 வருடம் கழித்து சில விஷயங்கள் புரிய வந்தது’ என்று அந்த பேட்டியில் ஓப்பனாக பேசியிருந்தார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment