மே மாசம் விஜய்சேதுபதி மாசமா? ஹாட்ரிக் போட்டுருவாரு போல..!

by sankaran v |
மே மாசம் விஜய்சேதுபதி மாசமா? ஹாட்ரிக் போட்டுருவாரு போல..!
X

தமிழ்த்திரை உலகில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி முன்னணி நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கினார். கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2ல் நடித்து முடித்தார். இப்போது தொடர்ந்து அவருக்கு வரும் மே மாசம் 3 படங்கள் வரப்போகிறதாம். இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க.

Ace: விஜய் சேதுபதி இசையையும் முறைப்படி கர்நாடக சங்கீதத்தையும் கத்துக்கிட்டு இருக்காராம். ஆறுமுகம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மலேசியாவுக்கு எல்லாம் போய் நடித்த படம் ஏஸ் (Ace)என்ற அந்த படம் முடிஞ்சி ரொம்ப நாளாச்சு. ஆனா அது ரிலீஸ் ஆகறதுக்கான எந்த அறிகுறியும் தெரியல.

பாண்டிராஜ்: மகாராஜா எல்லாம் வெற்றி அடைஞ்ச பிறகும்கூட இந்தப் படத்துக்கான ரிலீஸ்சுக்கு எந்த வேலையுமே நடக்கல. இப்ப மே மாசம் இந்தப் படத்தைக் கொண்டு வர்றதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்காம். சத்யஜோதி பிலிம்ஸ்சுக்காக விஜய்சேதுபதியை வச்சி பாண்டிராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். அதுவும் முடிஞ்சிடுச்சு.

மே மாசம் 3 படங்கள்: நாங்க மே மாசம் வரப்போறோம்னு சொல்றாங்களாம். அதே மாதிரி தாணு தயாரிப்பில் டிரெய்ன் படத்தை ஏப்ரல் மாசம் கொண்டு வர்றதா இருந்தாங்க. அதுவும் ஐபிஎல் அது இதுன்னு நகர்ந்து வந்தா அதுவும் மே மாசம் தான் வந்து நிற்கும். அப்படின்னா விஜய்சேதுபதிக்கு மே மாசம் 3 படம் வந்து நிக்கப் போகுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இடம் பொருள் ஏவல்: இதற்கிடையில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நீண்ட நாள்களாக கிடப்பில் கிடந்த இடம் பொருள் ஏவல் படம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளாக பெட்டியில் முடங்கிக்கிடந்த மகாராஜா தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் முடங்கிக் கிடந்த பல படங்களையும் வெளிக் கொண்டு வருவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இடம்பொருள் ஏவல் விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் நடிக்க 2018ல் இயக்குனர் லிங்குசாமி தயாரித்த படம். இது கண்டிப்பாக சூப்பர்ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தப் படமும் இந்த ஆண்டுல வெளிவரலாம்.

Next Story