Categories: latest news

ஒன்னுல மூணு… மீண்டும் ஆரம்பிக்கும் மனோஜ்… கவலையில் எழில்… வசமாக மாட்டிக்கொண்ட தங்கமயில்..

விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் நடக்க இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள் குறித்த இன்றைய எபிசோட் தொகுப்பு.

சிறகடிக்க ஆசை தொடரில் கடைக்கு வரும் பேங்க் ஊழியர் மனோஜுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டை வழங்குவதாக கூறுகிறார். இதற்காக ரோகிணி மறுத்தும் மனோஜ் கையெழுத்து போடுகிறார்.வித்யா மற்றும் ரோகிணி இருவரும் மருத்துவரை பார்க்க வருகின்றனர்.

அதே ஹாஸ்பிடலுக்கு சீதாவின் வேலை விஷயமாக மீனாவுடன் வருகிறார். மருத்துவர் பார்க்கும் ரோகிணி தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள எந்த பிரச்சினையும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். அதுபோல, சீதாவிற்கும் அதே மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அந்த விஷயத்தை மீனாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

எழில் கதை சொல்ல சென்ற இடத்தில் தயாரிப்பாளர் அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் எழில் வருத்தத்தில் இருக்க அவரை நண்பர் ஆறுதல் படுத்துகிறார். வீட்டில் இனியா கிச்சனில் வந்து வேலை செய்ய எதுவும் உதவி வேணுமா என கேட்க எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். செல்வி அவரை கிண்டல் செய்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் செழியன் வீட்டு செலவிற்காக பாக்யாவிடம் காசை கொடுக்கிறார்.

அப்போது அங்கு வரும் எழில் இதை பார்த்து வருத்தப்படுகிறார். ஈஸ்வரி எழிலிடம் வீட்டு செலவுக்கு காசு கொடுக்க சொன்னேனே எனக் கூற பதில் சொல்ல முடியாமல் கலங்கி அங்கிருந்து சென்று விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் மீனா மற்றும் செந்தில் பேசிக்கொண்டிருக்கின்றனர். தன் வாழ்க்கையிலேயே இன்றுதான் தான் சந்தோஷமாக இருந்ததாக மீனா கூறுகிறார்.

ராஜி மற்றும் கதிர் பேசிக் கொண்டிருக்கும்போது நீ உனக்கு தேவையான எதையும் அப்பாவிடம் கேட்காதே எனக் கூறுகிறார். நான் யாரிடமும் கேட்க மாட்டேன் நானே வாங்கிக் கொள்வேன் என்கிறார். கதிர் எப்படி என கேட்க தான் டியூஷன் விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமல் தயங்குகிறார்.

பின்னர் சென்னைக்கு தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் செல்ல அங்கு மீதம் இருக்கும் 21 ஆயிரம் பணத்தை கட்ட சொல்கின்றனர். இதில் அவர் அதிர்ச்சியாக இருக்க என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தங்க மயிலின் அம்மா கால் செய்து நீங்கதான் கவனிச்சிருக்கணும் என் பெண்ணை இப்படி ரோட்டுல நிக்க வச்சுட்டீங்களே என பேச கடுப்பாகி போனை கட் செய்து விடுகிறார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago