ஜெட் ஸ்பீடில் விஜய்… அரசியல் தலைவர்களை கிறுகிறுக்க வைக்கிறாருப்பா! இன்றைய ஸ்பெஷல்…

by ராம் சுதன் |
ஜெட் ஸ்பீடில் விஜய்… அரசியல் தலைவர்களை கிறுகிறுக்க வைக்கிறாருப்பா! இன்றைய ஸ்பெஷல்…
X

TVK Vijay: விஜயின் அரசியல் நகர்வுகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ள நிலையில் இன்றைக்கு ஒரு சூப்பர் விஷயத்தை அசால்ட்டாக செய்து இருக்கிறார்.

தன்னுடைய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென அரசியல் வாழ்க்கைக்குள் வர இருப்பதாக அறிவித்தார். அந்த வகையில் அவரின் அரசியல் கட்சி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு நிகழ்வும் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் நடத்திய இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வு வைரலாக பேசப்பட்டது. அதில் விஜய் பேசிய வாட் புரோ வசனமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடமே இருப்பதால் இனி அவருடைய அரசியல் விஷயம் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

விரைவில் ஜனநாயகன் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க இருக்கும் நிலையில் அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி விடுவார். தமிழகத்தில் இருக்கும் எல்லா தொகுதிகளிலும் நேரடியாக செல்ல இருப்பதாக தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ரம்ஜான் வர இருக்கும் நிலையில் அதற்கான நோன்பு தொடங்கப்பட்டு இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள விஜயும் விரதம் இருந்து கலந்து கொண்டு இருக்கிறார்.

பிரம்மாண்டமாக நடந்த நிகழ்வில் வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தொப்பியுடன் வருகை தந்த விஜய் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வில் விஜய் பேசும்போது, ”என் நெஞ்சில் குடியிருக்கும்” இஸ்லாமிய சொந்தமான அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம் எனப் பேசி இருக்கிறார்.

Next Story