டிஸ்டர்ப்பா இருந்தா மன்னிச்சிடுங்க!.. தவெக மாநாட்டின் தொகுப்பாளர் துர்கா தேவி ஃபீலிங்!...

by ராம் சுதன் |

Vijay tvk maanadu: நடிகர் விஜய் பல வருடங்களாகவே அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததாலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு பெரிய அரசியல் ஆளுமை தமிழகத்தில் இருந்ததால் அமைதியாக இருந்தார். ஒருபக்கம், அவரின் ரசிகர் மன்றங்கள் சமூக சேவைகளை செய்து வந்தது.

இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி அரசியலில் போட்டியிடும் என சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் நடந்தது.

இந்த மாநாட்டில் விஜய் ரசிகர்கள் 8 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் ஆக்ரோஷமாக பல விஷயங்களை பேசினார். தனது கட்சியின் கொள்கைகள் என்ன?, தனது கொள்கை எதிரி யார்?.. அரசியல் எதிரி யார்? என அனைத்தையும் பேசினார் விஜய்.

இந்த விழாவில் தொகுப்பாளராக இருந்தவர் துர்கா தேவி. தனது கீச் குரலால் தளபதி வந்துவிட்டார்.. தளபதி தனது பெற்றோரிடம் ஆசி வாங்குகிறார்.. தங்க தலைமகன்.. தளபதி நடந்து வருகிறார்’ என விஜயை பில்டப் செய்து பேசினார். எனவே, இவரின் பேச்சை சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

துர்கா தேவி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளரும் கூட. 5 வருடங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதை பார்த்து ‘நல்லா பண்ணீங்கம்மா’ என விஜய் தன்னை பாராட்டியதாக துர்கா தேவி சொல்லி இருந்தார். ஆனாலும் அவரின் பேச்சை சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள துர்கா தேவி ‘நான் என்னுடைய பெஸ்டை கொடுத்தேன். என்னுடைய உணர்வுபூர்வமான குரல் உங்களை தொந்தரவு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க.. இந்த இடத்துக்கு நான் சாதாரணமாக வரவில்லை. எத்தனையோ டிவி ஆங்கரை தாண்டி ஒரு சாதாரண பெண்ணா உங்களில் ஒருவரா நான் இத பண்ணதுக்கு நீங்க எனக்கு ஆதரவு இருக்கணும். உங்க அக்காவ நினைச்சு எனக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டீங்களா.. அந்த ஆதங்கம்தான் எனக்கு’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.

Next Story