இதுவரை என் அப்பாவ பத்தி யாரும் இப்படி கேட்கல! விஜய் பற்றி ராதாரவி பெருமிதம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:15  )

அரசியலுக்கு தகுதிவாய்ந்தவர்தான் விஜய் என ராதாரவி சமீபத்தில் கூறியது மிகவும் வைரலாகி வருகிறது.விஜயுடன் இணைந்து கடைசியாக் ராதாரவி நடித்த படம் சர்கார். அந்தப் படத்தின் போது விஜய்க்கும் ராதாரவிக்கும் இடையே சில உரையாடல்கள் நடந்திருக்கின்றன. அதை பற்றி ஒரு பேட்டியில் ராதாரவி கூறியிருக்கிறார். சர்கார் படத்திற்கு முன் ராதாரவியும் விஜயும் இணைந்து நடித்து ரசிகர்களால் கவரப்பட்ட படம் ஃபிரண்ட்ஸ்.

அதில் மிகவும் கோபக்காரராக ராதாரவி நடிக்க அதை மிகவும் கூலாக ஹேண்டில் பண்ணும் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். அதன் பிறகு சர்காரில்தான் இருவரும் சேர்ந்து நடித்தனர். சர்காரில் ஒரு மாதிரியான வில்லன் கேரக்டரில் ராதாரவி நடித்திருப்பார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ராதாரவியை தனியாக அழைத்து பேசினாராம்.

அப்போது எம்.ஆர். ராதா எம்ஜிஆரை சுடப்பட்ட வழக்கு சம்பந்தமாக கேட்டறிந்து கொண்டாராம் விஜய். அதாவது அந்த வழக்கு சமயத்தில் உங்களோட வீட்டில் உள்ளவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்வியை கேட்டிருக்கிறார் விஜய். இந்த மாதிரி கேள்வியை இதுவரை யாரும் கேட்டதில்லை.

ஏன் எம்ஜிஆரை சுட்டார்? என்ன காரணம்? எம்.ஆர். ராதாவுக்கு அப்படி என்ன கோபம் ? என்ற கேள்விகள்தான் என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் விஜய்தான் முதன் முறையாக எங்க மனநிலை எப்படி இருந்தது என கேட்டார் என அந்தப் பேட்டியில் ராதாரவி கூறினார்.

அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி நான் பெரிதாக பேசவில்லை. ஏனெனில் அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. வரட்டும் என ராதாரவி கூறினார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை காணும் விஜய் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் அதற்கான அனைத்து வேலைகளையும் கவனித்து வருகிறார்.

இந்த தேர்தல் விஜய்க்கு ஒரு சவாலான தேர்தலாகவும் இருக்கும். ஒரு பக்கம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து நிற்கிறார். இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டோம் என கங்கனம் கட்டி நிற்கிறாரகள். இதையெல்லாம் தாண்டி விஜய் வந்தார் என்றால் உண்மையான தலைவன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாறிவிடுவார் விஜய்.

Next Story