Vijayakanth: பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த விஜயகாந்தின் மகனுக்கு விரைவில் திருமணம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பாலும், ஆக்ஷன் சண்டை காட்சிகளாலும் தனி இடம் பிடித்தவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் கடனில் இருந்த நடிகர் சங்கத்தினை தலைவராக வந்து மீட்டெடுத்து கொடுத்தவர்.
அதை தொடர்ந்து தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். அரசியலில் முழு ஈடுபாட்டுடன் வளர்ந்து வந்தவர். நல்ல இடத்திற்கு வரும் போது அவருடைய உடல் பிரச்னை தலை தூக்கியது.
பல வருடமாக உடல் நலமில்லாமல் இருந்த விஜயகாந்த் இரண்டு ஆண்டுக்கு முன்னர் மறைந்தார். பிரபலங்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர் செய்த உதவியால் லட்சக்கணக்கானோர் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினர்.
அவருடைய குடும்பத்தினர் அழுதுக்கொண்டு நின்றதும் வைரலாகி ரசிகர்கள் இனி நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்றனர். அதை தொடர்ந்து மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.
இளைய மகன் சண்முக பாண்டியன் கோலிவுட்டில் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் படைத்தலைவன் படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தின் ஷூட்டிங்கையும் முடித்து இருக்கிறார்.
இதில் படைத்தலைவன் படத்தின் வசூல் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சண்முக பாண்டியன் எங்க வீட்டுக்கு அண்ணி விரைவில் வருவார். எங்க அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும். அதற்கான நேரம் வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இதனால் விஜயபிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் விஜயபிரபாகரனுக்கு நிச்சயம் நடந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை பிரச்னையால் திருமணம் நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…