Tvk vijay: என்ன மிஸ்டர் சீமான் சாபமெல்லாம் விடுறீங்க... நீங்க என்ன உத்தமரா..? விஜய்க்கு ஆதரவாக பேசிய நடிகை..!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக, அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். இதையெல்லாம் விட்டுவிட்டு தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் குதித்து இருக்கின்றார்.
தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அதனை முறையாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தொடர்ந்து தனது கட்சி தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தார்.
ஆரம்பத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது ஆதரவு தெரிவித்து வந்தவர்கள் கூட மாநாட்டிற்கு பிறகு பல அரசியல் இயக்கங்கள் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதிலும் தம்பி தம்பி என்று விஜயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய சீமான் எல்லாம் ஒரு படி மேலே சென்று மிக காட்டமாக விமர்சித்து இருக்கின்றார்.
அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்யை கூமுட்டை என்றும், லாரி அடித்து செத்துப் போவாய் எனவும் பேசி இருப்பது விஜய் ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எக்ஸ் தள பக்கத்தில் சீமானை கடுமையாகவும் மோசமாகவும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் 26 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அப்போது பேசிய அவர் சீமானின் கருத்துக்கு பதில் கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்காமல் கடந்து செல்ல வேண்டும். கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் அறிவுறுத்தி இருக்கின்றார். இந்நிலையில் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் 'என்ன மிஸ்டர் சீமான் சாபமெல்லாம் விடுகிறீர்கள். விஜய் அண்ணனுக்கு ரோட்டின் இந்த பக்கம் இரு அல்லது அந்த பக்கம் இரு நடுவில் இருந்தால் லாரி எடுத்து செத்துப் போவேய் என்று சாபமெல்லாம் விடுகிறீர்கள். நீங்கள் என்ன ரொம்ப உத்தமரா சீமான்? நான் உங்க ரூட்டுக்கு வரேன். விஜய் அண்ணன், திமுக இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் கொள்கை ரீதியாக தானே தவறாக உள்ளார்கள்.
கொள்கை ரீதியாக தவறு செய்பவர்களை லாரி அடித்து செத்துப்போவர்கள் என்றால், எங்களைப் போன்ற பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த நீங்கள் எது அடித்து சாக மாட்டீர்கள் மிஸ்டர் சீமான்? உங்கள் கட்சியில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சரி செய்துவிட்டு பின்னர் மற்றவர்களை பாருங்கள். திருச்சி சூர்யா உங்களின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு உங்கள் மானத்தை வாங்கப் போகிறாராம்.
முதலில் அதை போய் கவனிங்கள். திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும், விஜய் அண்ணனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். நீங்கள் தான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள். உத்தமர் போலவும் கண்ணகி மாதிரியும் சாபமெல்லாம் விடாதீங்க, நான் தான் உங்களுக்கு 24 மணி நேரம் சாபம் விட்டு கொண்டுள்ளேன்' என்று கூறி இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. மேலும் நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.