Categories: Cinema News latest news

விஜய், தனுஷைத் தொடர்ந்து விக்ரம் வாங்கிய கார்… அடேங்கப்பா இவ்ளோ விலையா?

தமிழ்சினிமா உலகில் எப்பவுமே கேரக்டருக்காக மெனக்கிடும் நடிகர்களில் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரம்.

சேது படத்தில் இவர் உடலை வருத்தி மனநலம் பாதிக்கப்பட்டவராக மொட்டை அடித்து மெலிந்து நடித்து இருந்தார். பாலாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அவரது திரையுலக வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து வந்த பல படங்களில் கேரக்டருக்காக தன் உடலை வருத்தினார்.

காசி படத்தில் கண்தெரியாதவராகவே வாழ்ந்தார். தொடர்ந்து பிதாமகன், அந்நியன், கோப்ரா, ஐ, தங்கலான் என பல படங்களில் வித்தியாசமாக நடித்தார் விக்ரம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வீரதீர சூரன்.

தங்கலானும் சரி. வீர தீரசூரனும் சரி. பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் தரமான நடிப்பைக் கொடுத்து இருந்தார். ச்சீயான் விக்ரம் என்ற பெயர் சேது படத்தில் இருந்து அவருக்கு நிலைத்து விட்டது. தங்கலான் படத்திற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு விக்ரம் உருமாறி இருந்தார்.

காட்டில் அட்டைகள் எல்லாம் ரத்தத்தை உறிஞ்சுமாம். அதில் இருந்து தப்பிக்க பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அப்படி எல்லாம் பலநாள்கள் கஷ்டப்பட்டு அந்தப் படத்தில் நடித்துள்ளார். ஆனாலும் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விக்ரம் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளார். போஹிமியான் ரெட் கலர்ல இருக்குற இந்த கார் ரொம்ப நீளமாக உள்ளது. ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது. இந்தக் காரின் விலை 8 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிகிறது.

தமிழ்த்திரை உலகில் விஜய், தனுஷ் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினர். அந்த லிஸ்ட்ல இப்போது விக்ரமும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான வீடியோவைக் காண… https://www.instagram.com/reel/DIdvS46SHkT/

Published by
sankaran v