Connect with us

தொடரும் விவாகரத்து சர்ச்சைகள்.. விக்ரமுக்கும் இப்படியொரு பிரச்னையா? வெளிவராத உண்மை

latest news

தொடரும் விவாகரத்து சர்ச்சைகள்.. விக்ரமுக்கும் இப்படியொரு பிரச்னையா? வெளிவராத உண்மை

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அதில் சில பேர் தங்கள் வாழ்க்கையை முறித்துவிட்டு சுதந்திரமாக வாழ போகிறோம் என பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனர். இதில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்வதே இல்லை.

குழந்தைகள் குடும்பம் என இருந்தாலும் என்னுடைய ப்ரைவேசி முக்கியம் என்பதே அவர்களின் பிரிவுக்கு காரணமாக இருந்து வருகிறது. நீ உன் வேலை பாரு, நான் என் வேலையை பார்க்கிறேன் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. கணவன் மனைவி என்றாலே இன்பத்திலும் துன்பத்திலும் சரி பாதி. ஆனால் பெரும்பாலானோர் என் விஷயத்தில் தலையிடக் கூடாது என்றே கூறி பிரச்சினையை ஆரம்பிக்கின்றனர்.

அதுவும் திருமணமாகி ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் ஆன பிறகு பிரிவு என்ற முடிவுக்கு வந்தால் கூட ஓகே. திருமணமாகி 15 வருடம் 18 வருடம் ஏன் அதற்கும் மேல் வாழ்ந்தவர்கள்தான் இன்று விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றனர். சமீபத்தில் ரவிமோகன் ஆர்த்தி விவாகரத்து பிரச்னைதான் பேசுபொருளாக இருக்கிறது. இதை பற்றி கூட ப்ளூ சட்டை மாறன் ரவி மோகன் ஆர்த்தி பிரச்னையை அமெரிக்க அதிபர் டிரெம்ப் வந்து கூட தீர்த்து வைக்க முடியாது போல என பதிவிட்டிருந்தார்.

இந்த விவாகரத்து யார் வாழ்க்கையிலும் வரலாம். ஏன் ரஜினி கூட தனக்கு இரு பிள்ளைகள் இருந்தும் ஒரு கட்டத்தில் லதா ரஜினியிடம் விவாகரத்து கேட்டு பிரச்னை செய்தார். இதை எப்படியாவது சரி பண்ணணும் என கருதி லதா ரஜினி பாலச்சந்தரிடம் போய் முறையிட்டார். பாலச்சந்தர்தான் ரஜினியிடம் சுமூகமாக பேசி அந்த எண்ணத்தில் இருந்து ரஜினியை விடுவித்தார் என்பது தகவல்.

இதே மாதிரி பல பிரச்னைகளை நாம் அடுக்கிக்கிட்டே போகலாம். பல பேர் வீட்டில் பல பிரச்னைகள் நடந்திருக்கிறது. இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம். நடிகர் விக்ரம் வீட்டிலும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் விக்ரம் டைவர்ஸ் அது இதுனு பேசுறாரா? அவர் அழகாக தன்னுடைய குடும்பம் தொடர்பாக எந்தவொரு விஷயத்தையும் வெளியில் விடாமல் பார்த்துக் கொள்கிறார்.அவர் வீட்டில் நடக்கும் பிரச்னைகள் வெளியில் வராமல் இருக்கின்றது என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top