கோரமான விபத்து.. 23 சர்ஜரிகள்… காலை எடுக்க வேண்டிய நிலை… மீண்டு வந்த சியான் விக்ரம்!..
தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் ஒருவரான சீயான் விக்ரம் படங்களில் மட்டுமல்லாமல் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நிறைய சவால்களை கையாண்டு இருக்கிறார். காலை எடுக்கும் சூழ்நிலையில் சென்ற ஒரு சம்பவத்தை தன்னுடைய தங்கலான் ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருக்கிறார்.
எந்தவித பின் புலனும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் விக்ரம். அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் கோலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் நடித்த திரைப்படம் எல்லாமே அசாதாரணமானது தான்.
காசி, சேது உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஐ திரைப்படத்தில் தன் உடலை வருத்தி எடையை பெரிய அளவில் குறைத்து நடித்து அசத்தியிருப்பார். அதை பார்த்த ரசிகர்களும் மிரண்டு போயினர். சமீபத்தில் கூட தங்கலான் திரைப்பட சூட்டிங்கில் விக்ரமிற்கு மிகப்பெரிய விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிப்பிற்கு வருவதற்கு முன்னரே அவர் வாழ்வில் சந்தித்த மிக துயரமான ஒரு விபத்து குறித்து பேசி இருக்கிறார். கல்லூரி காலங்களிலேயே நடிப்பில் விக்ரமிற்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. அதனால் கல்லூரி நாடகங்களில் நடித்து வந்தார். அப்பொழுது அவர் ஆசை ஒரு துயரமான விபத்தால் தடைப்பட்டது. அதனால் மூன்று வருடங்கள் மருத்துவமனையில் கழிக்க வேண்டிய நிலை உருவானது. 23 சர்ஜரிகள் செய்தும் கால் சரியாகாமல் இருந்த நிலையில் நடக்கவே முடியாது என்ற நிலை உருவானது.
இரண்டும் விக்ரமுக்கு நடிப்பின் மீது இருந்த தீரா காதல் அவரை கட்டுப்பாடுடன் வைத்தது. தொடர்ந்து முயற்சி செய்தார். அதில் வெற்றிக்கண்ட பின்னரே அவர் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அந்த நேரத்திலும் அவர் கொண்ட ஆர்வமே இங்கு நிறுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.