Categories: Cinema News latest news

அமீரை இயக்குனராக்க விக்ரம் செஞ்ச வேலை.. கடுப்பான அமீர் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் விக்ரம் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடித்தவரும் விக்ரமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.

தங்கலான் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இதுவரை இல்லாத ஒரு கெட்டப்பில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். ஆஸ்கார் விருதை கூட அந்த படம் தட்டிச்செல்லும் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த அளவுக்கு திரைக்கதையும் விக்ரமின் நடிப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் விக்ரமை பற்றி இயக்குனர் அமீர் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் வளர்ந்து வரும் நேரத்தில் விக்ரமும் அமீரும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.

அமீரை எப்படியாவது இயக்குனராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட் ஆன நரசிம்மா படத்தை ரீமேக் செய்யும்படியும் அதில் நான் நடிக்கிறேன் என்றும் விக்ரம் சொல்லி இருந்தாராம். ஆனால் அமீர் அதற்கு ‘இயக்குனராக வேண்டும் என்றுதான் நான் இங்கு சென்னைக்கு வந்தேன். அதற்காக மற்ற படங்களை ரீமேக் செய்து தான் நான் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை அவசியமும் இல்லை.

எப்பேர்பட்டாவது புது கதையோடு தான் படத்தை இயக்குவேன்’ என்ற ஒரு கொள்கையில் இருந்தாராம அமீர். ஆனால் விக்ரம் ‘நீ இயக்குனராக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் இந்த மாதிரி சொன்னேன்’ எனக் கூறியதாகவும் அதன் பிறகு அந்த படத்தை எடுக்கவில்லை என்றும் அமீர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் இன்றுவரை அமீருக்கும் விக்ரமுக்கும் இடையே அந்த ஒரு நட்பு இருந்து வருகிறது.

Published by
ராம் சுதன்