Categories: latest news

குருதிப்புனல் படத்தில் விக்ரம்!.. கமல் எப்படிப்பட்டவர்னு தெரியுமா?.. சீயான் சொல்லும் தகவல்

நடிகர் விக்ரம் தனது படங்களில் கமல் போல மேக்கப்பிலும் சரி. நடிப்பிலும் சரி. வித்தியாசமாக மாறுபட்ட தோற்றத்தில் நடித்து அசத்துவார். அவரது அந்நியன், ஐ படங்களில் அவர் எடுத்துள்ள சிரத்தையைப் பார்த்தாலே தெரியும்.

முகம் விகாரமாக ‘ஐ’ படத்தில் இயக்குனர் ஷங்கர் அவரை கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியாதவாறு மாற்றி இருப்பார். உடல் முழுவதும் கொப்பளங்கள், கூன் என்று பார்க்கவே சிறு குழந்தையும் பயப்படும் வகையில் இருப்பார். அதற்கேற்ற நடிப்பையும் படத்தில் கொடுத்து இருந்தார் விக்ரம்.

அதே போல அந்நியன் படத்திலும் 3 வகை கெட்டப்புகளில் ஷங்கர் அவரைத் தெறிக்க விட்டிருப்பார். அந்த வகையில் கமல் பல படங்களில் வித்தியாசம் காட்டி இருப்பார். அவற்றில் அபூர்வ சகோதரர்கள், ஹேராம், அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம், கல்கி கி.பி.2898 என பல படங்களில் நமக்கு பிரமிப்பை உண்டாக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிக்கு அடுத்து யாரைக் கேட்டாலும் சொல்லக்கூடிய நபர் கமல். அவருக்கு அடுத்து யாரைக் கேட்டாலும் சொல்லக்கூடிய நபர் விக்ரம். கமலுடன் நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு குருதிப்புனல் படத்திற்காகக் குரல் கொடுத்த விக்ரமுக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்குப் பேசி இருந்தார்.

இப்போது அந்தப் படத்தைப் பார்த்து எந்தக் கதாபாத்திரத்திற்கு விக்ரம் குரல் கொடுத்தார்னா கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. எப்போது அவர் கமல் சாரை சந்தித்தாலும் சினிமாவைப் பற்றித்தான் பேசுவார். ஒவ்வொரு தடவை பேசும்போதும் புது விஷயத்தைப் பற்றித் தான் பேசுவார். இப்பவும் அவரை நேரில் பார்க்கும்போது சகலகலாவல்லவன் படத்தைத் தியேட்டரில் பார்த்த பிரமிப்போடுதான் பேசுவேன் என்கிறார் விக்ரம்.

அதற்குப் பிறகு பல முறை அவரை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு முறை பேசும்போதும் ஒரு பத்து நிமிஷம் விக்ரம்னு ஆரம்பிப்பார். ஆனால் பல பத்து நிமிஷங்களைக் கடந்து நாங்க பேசிருக்கோம். அவருடன் பேசுவதை எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஏன்னா அத்தனை அபூர்வ தகவல்களை அந்தப் பேச்சினூடே தரும் மாபெரும் கலைஞர்தான் கமல் என்று ஒரு பத்திரிகை பேட்டியிலே பகிர்ந்து கொண்டு இருக்கிறார் விக்ரம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

7 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago