ரி ரிலீஸில் புதிய சாதனை படைத்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’! இதுக்கு மேல ஒன்னு இருக்கா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:08  )

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் காலம் தாண்டி நின்று பேசக்கூடிய படங்களாக அமையும். அந்த வகையில் சிம்பு மற்றும் த்ரிஷா இவர்களது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா.

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதிய இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா ஒலிப்பதிவு செய்திருந்தார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை விநியோகித்தது. எல்ரெட் குமார் படத்தை தயாரித்திருந்தார்.

படத்தின் கதைப்படி இந்து தமிழ் பையனான கார்த்திக்கும் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த மலையாளி கிறிஸ்தவரி ரிலீஸிங்கில் புதிய சாதனை படைத்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’! இதுக்கு மேல ஒன்னு இருக்கா? பெண்ணான ஜெஸ்சிக்கும் இடையிலான காதல் பற்றிய உறவை இந்த படம் சொன்னது.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெஸ்ஸியின் அலட்சியம் மற்றும் தயக்கம் இவற்றால் கார்த்திக் ஜெஸ்சியை காதலிக்கிறான். கடைசியில் இவர்கள் காதல் கைகூடியதா இல்லையா என்பதை பற்றி விளக்கும் திரைப்படமாக தான் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியானது.

படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 வருடங்கள் கடந்த நிலையில் படத்தை ரி ரிலீஸ் செய்திருந்தனர். பி வி ஆர் சினிமாவில் இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத ஒரு சாதனையாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீஸில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இன்றுடன் படம் ரீ ரிலீஸ் செய்து 1000வது நாளில் அடி எடுத்து வைத்திருக்கின்றது. இப்படி எந்த ஒரு படமும் இவ்வளவு பெரிய சாதனையை செய்ததில்லை என ஒட்டுமொத்த சினிமாவும் படத்தைப் பற்றி பலவாறு பாராட்டி பேசி வருகின்றனர்.

கதை ஒருபக்கம் இருந்தாலும் படத்தின் பாடல்கள் ஒரு வகையில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இன்று வரை இளசுகளின் மனதில் நின்று ஒலிக்கக் கூடிய வகையில் பாடல்கள் அமைந்திருந்தன.

Next Story