சமீபத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால் திடீரென மேடையில் மயக்கம் போட்டு விழ அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. விஷாலின் உடல் நிலை குறித்து தொடர்ந்து ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு முன் மதகஜராஜா பட விழாவில் கலந்து கொண்டு பேசிய போது மைக்கை பிடித்த அவரது கை நடுங்க தொடங்கியது.
உடனே பத்திரிக்கைகளில் அவரை பற்றி பல தவறான விஷயங்கள் பரவ தொடங்கியது. இதை பற்றி இப்போது விஷால் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். புரட்சித்தளபதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான விஷால் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக ஒரு சில படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
செல்லமே படம் அவருக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் விஷால். அவன் இவன் படத்திற்கு பிறகுதான் அவரது உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. கண்ணில் ஏதோ குறைபாடு இருப்பதாகவும் விஷாலே தெரிவித்திருந்தார்.
சொல்லப்போனால் அவன் இவன் படத்திற்கு பிறகு சொல்லி கொள்ளும்படி அவருக்கு வெற்றிப்படம் அமையவில்லை. இப்படி இருக்கும் சூழ் நிலையில்தான் மதகஜராஜா படம் வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு அந்தப் படம் வெளியாகி சூப்பட் டூப்பர் ஹிட்டானது. அந்த பட விழாவிற்கு வந்திருந்த போதுதான் அவரது கை நடுங்க தொடங்கியது. அந்த நேரத்தில் விஷாலுக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்ததாம்.
ஒரு மூன்று நாள்கள் வெளியே எங்கேயும் போகக் கூடாது என டாக்டர் சொல்லியிருக்கிறார். ஆனால் 12 வருடத்திற்கு பிறகு ஒரு படம் வெளியாகப் போகிறது. ஒரு மணி நேரமாவது இருந்துவிட்டு வருகிறேன் என டாக்டரிடம் விஷா சொல்லியிருக்கிறார். அங்கு ஏசி இருக்கும். அப்படிப்போனால் உங்கள் உடல் தாங்காது. நடுங்கிவிடும் என சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதை போல் கை நடுக்கம் கொடுத்துவிட்டது என விஷால் கூறினார்.
vishal
மேலும் புகை பிடிப்பதை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிவிட்டதாம். குடிப்பதை நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிறதாம். ஆனால் அவர் குடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிவிட்டார்கள் என விஷால் கூறினார்.
