Categories: latest news

விஷாலுக்கு இருந்தது வைரஸ் காய்ச்சல் அல்ல… அதையும் தாண்டி… இதுக்கு காரணம் யாரு தெரியுமா?

மதகஜராஜா படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்ல விஷாலுக்கு கை நடுக்கம் இருந்தது. இது வைரல் காய்ச்சலோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.

விஷாலுக்கு இருந்தது வைரஸ் காய்ச்சல் அல்ல. அது நல்லாவே தெரியுது. ஏன்னா அப்படி இருந்தா இன்னொருத்தரை தொடவே மாட்டாங்க. அவரு குஷ்பூவைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்தாரு. அவருக்கு இருக்குற பிரச்சனையே வேற. அது என்னன்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்கிறார். என்னன்னு பார்ப்போமா…

அவருக்கு வந்தது வேற பிரச்சனை என்பது ‘டக்’னு பார்க்கும்போதே தெரிகிறது. மதகஜராஜா படத்தின் ஈவென்ட்ல விஷால் பேசியது மறுநாளே செய்தியாக வந்ததும் வேற வழியில்ல. அவங்க பூசி மெழுக வேண்டிய சூழ்நிலையில இருக்காங்க. வைரல் ஃபீவர்னு சொல்றாங்க.

அப்படின்னா அவங்க யாரையும் தொடவே மாட்டாங்க. மாஸ்க் இல்லாம தான் வந்தாரு. குஷ்பூவைக் கட்டிப்பிடிச்சி முத்தம்லாம் கொடுத்ததைப் பார்த்தோம். அவருக்கு இருந்தது அந்த வைரல் ஃபீவர் இல்ல. அதை திரையுலகில் கடந்த பல வருடங்களாக விஷாலை நாம பார்த்து வர்றோம்.

அவர் எவ்வளவு பெரிய சிக்கல்களுக்கு ஆளாகி இருக்காரு. இன்னும் எவ்வளவு பெரிய குழப்பங்களுக்கு ஆளாகி இருக்காருன்னு தெரியும். இன்னும் தேவையில்லாத டென்ஷன்ல நிச்சயமா உடம்புல பெரிய பாதிப்பு வரும். அதுதான் விஷாலுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கும்.

இன்னொன்னு பாலாவின் அவன் இவன் படம் வந்து பல வருஷங்களாக விஷாலுக்கு மிகப்பெரிய துன்பத்தைக் கொடுத்துக்கிட்டே இருக்கு. சமீபத்தில் வெளிநாட்டுக்குப் போயி அதுக்காக சிகிச்சை எடுத்துட்டு கூட வந்தார். ஓயாத ஒற்றைத்தலைவலி. அவரால அதை மாற்றவே முடியல. என்னென்னவோ ட்ரீட்மெண்ட்லாம் எடுத்தாரு.

அப்புறம் ஆபரேஷன்னும் சொன்னாங்க. எல்லாம் எடுத்தும் அது குறையல. இப்போ கை நடுக்கத்துக்கே ட்ரீட்மெண்ட்னு சொல்றாங்க. அவர் வராமலே இருந்துருக்கலாம். இல்லன்னா கையைக் காட்டாம இருந்துருக்கலாம்.

5 ஸ்டார் கதிரேசன், சத்யஜோதி பிலிம்ஸ்னு இருவருக்கும் படங்கள் பண்ண வேண்டி இருக்கு. ஆனால் அவர் போகவே இல்லை. இரும்புத்திரை 2 தான் பண்ற மாதிரி மூடுல இருக்காரு. அவர் இப்போது நடிக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை.

mathakajaraja

இந்த வைரல் ஃபீவர்லாம் இந்தப் பிரச்சனையை ஆஃப் பண்றதுக்காக சொல்றதுதான். இந்தப் படத்தை (மதகஜராஜா) ஓட வைக்க அவர் இப்படி ஒரு நடிப்பை நடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

விஷால், சந்தானம் நடித்துள்ள மதகஜராஜாவை சுந்தர்.சி. நிச்சயம் கலகலப்பாகக் கொண்டு செல்வார். அதே நேரம் படத்தில் சந்தானம் காமெடியும் பட்டையைக் கிளப்பம் என்பதால் படம் நல்லா வரும் என்றே நினைக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

1 hour ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

12 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

13 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

14 hours ago