தளபதினா கொக்கா? ‘கோட்’ படத்தோடு மோதும் விஷால்.. ஆழம் தெரிஞ்சே காலை விடுறாரு
போற இடமெல்லாம் கன்னிவெடியா வைக்கிறாங்களே என்ற வடிவேலு காமெடிக்கேற்ப விஷாலின் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான் ஆகி விட்டது. தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுதான் வருகிறார். ஏற்கனவே விஷாலுக்கும் லைக்காவிற்கும் இடையே உள்ள பிரச்சினை பற்றி கேஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று அது சம்பந்தமாக ஆஜராக போன விஷால் நீதிபதியிடம் வெள்ளைப் பேப்பரில் என்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என சிறுபிள்ளைத்தனமாக கூற அவரை நீதிபதி கண்டித்து அனுப்பினார். மேலும் யாருமே இதுவரை ஏன் படங்களில் கூட இப்படி அழைத்திருக்க மாட்டார்கள். அப்படி நீதிபதியை பாஸ் என அழைத்திருக்கிறார் விஷால்.
இதற்கு நீதிபதி ‘பாஸ் எல்லாம் கூப்பிடக் கூடாது ’ என எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர். இப்படி வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள். சினிமாவிலும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு எந்தவொரு படமும் அவருக்கு சொல்லும் படியாக அமையவில்லை.
அவர் ஏற்கனவே நடித்து பல ஆண்டுகளாக ரீலீஸாகாமல் இருக்கும் திரைப்படமாக மதகஜராஜா திரைப்படம் அமைந்திருக்கிறது. அந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுவும் விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கோட் படத்தோடு விஷாலின் மதகஜராஜாவும் ரிலீஸாக இருக்கின்றதாம். செப்டம்பர் 5 ஆம் தேதி இருபடங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாக போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
ஆனால் இன்னும் நாள்கள் இருக்க இடைப்பட்ட காலத்தில் கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதைப் போலத்தான் தங்கலானும் அந்தகனும் ஒரே தேதியில் ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் திடீரென அந்தகன் திரைப்படத்தின் ரிலிஸை ஆகஸ்ட் 9 என மாற்றினார்கள்.
அதைப் போல மதகஜராஜா படத்தின் ரிலீஸிலும் மாற்றம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் படம் எப்படி இருந்தாலும் கொஞ்சமாவது லாபம் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் அதைவிட்டு விஜய் படத்தோடு மோதி போட்ட முதலீட்டையும் எடுக்க முடியாமல் தயாரிப்பாளர் துண்டை போட்டு போகவேண்டியதுதான். அதனால் கண்டிப்பாக மதகஜராஜா படத்தின் ரிலீஸ் தேதி மாறலாம் என்று சொல்லப்படுகிறது.