Connect with us

Cinema News

இனிமே இப்படி ஆட்டிகிட்டுதான் பேசுவேன்!.. ஓவர் குசும்பு விஷால் உங்களுக்கு!..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். தொடர்ந்து சினிமாவில் ஆக்சன் திரைப்படங்களில் கலக்கி வந்த விஷால் சமீப வருடங்களாக பெரிய அளவு ஹிட் திரைப்படங்களை கொடுக்கவில்லை. கடந்த பொங்கல் பண்டிகைக்கு விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி-யால் இயக்கப்பட்ட மதகஜராஜா என்கின்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

படம் தாமதமாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பொங்கல் பண்டிகைக்கு வின்னராக மாறி இருக்கின்றது மதகஜராஜா திரைப்படம். இதனால் நடிகர் விஷால், சுந்தர் சி ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஷால் பிரபலமானாரோ இல்லையோ தனது கை நடுக்கத்தின் மூலமாக மிகப்பெரிய அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். மதகஜராஜா திரைப்படம் வெளியாகின்றது என்பதை தொடர்ந்து படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் கடும் காய்ச்சலுடன் வந்து கலந்து கொண்டார். அப்போது அவர் மைக்கை பிடித்து பேசிய போது கைகள் பயங்கரமாக நடுக்கம் கண்டது.

இதை பார்த்த பலரும் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய நோய் இருக்கின்றது என தேவையில்லாத பல புரளிகளை கிளப்பி விட்டார்கள். அந்த சமயத்தில் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து விஷால் குறித்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து உடல்நிலை சரியாகி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார் விஷால். படத்தின் சக்சஸ் மீட்டில் மிகச் சிறப்பாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஷால் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் ‘அதற்கு சரியான நேரம் வர வேண்டும். திரும்பவும் நான் உங்களை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சந்திப்பேன். அப்போது இது குறித்து உங்களிடம் கூறுகிறேன்.

தற்போது தன்னுடைய பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். இன்னொரு கட்சி இன்னொரு கொடி போன்றவை வேண்டாம் என்று நினைக்கின்றேன். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. எங்களது வேலைகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம் என்று பேசி இருந்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் இனிமேல் நான் எங்கு சென்றாலும் மைக்கை ஆட்டிக்கொண்டே தான் பேச வேண்டும். விஷால் இப்படி மைக்கை ஆட்டிக்கொண்டு பேசுவது தான் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டது. இதன் மூலமாக எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பது எனக்கு தெரிய வந்தது. நான் இப்போது சூப்பர் சுப்பராயன் மாஸ்டரிடம் தான் செல்கின்றேன். எனக்காக அவர் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அதனால் அவரை பார்க்க செல்கிறேன். ரொம்ப நன்றி இந்த நடுக்கத்தின் மூலமாக என்னை உலகம் முழுவதும் நீங்கள் ஃபேமஸ் ஆக்கிவிட்டீர்கள். இனிமே எந்த பேட்டியாக இருந்தாலும் மைக்கை இப்படி ஆட்டிக்கொண்டே பேசினால் தான் சரியாக இருக்கும். மதகஜராஜா திரைப்படத்திற்கு பிறகு சுந்தர் சியுடன் இணைய இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் உங்களை வந்து சேரும்’ என்று கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top