Categories: Cinema News latest news

பிரம்மாண்ட படத்தின் ஹார்ட் டிஸ்கை அபேஸ் செய்த ஊழியர்… என்னப்பா நடக்குது இங்க?

Kannappa: பெரிய பட்ஜெட்டில் முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பா படத்தின் பிரச்னையால் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அதுகுறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் முகேஷ் குமார் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மோகன்லால் கிராட்டா, அக்‌ஷய் குமார் ஷிவா, பிரபாஸ் ருத்ரா, காஜல் அகர்வால் பார்வதி உள்ளிட்ட வேடத்திலும் கேமியோ செய்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து முடிந்து இருக்கும் நிலையில் படம் முதலில் ஏப்ரல் 25ந் தேதி ரிலீஸ் செய்வதாக திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து சில பிரச்னைகளால் தற்போது ஜூன் 27ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்த விசாரணையில், மும்பையை சேர்ந்த விஎஃப்எக்ஸ் நிறுவனமான ஹைவ் ஸ்டுடியோஸ் ஹார்ட் டிஸ்கை 24 பிரேம்ஸ் நிறுவனத்துக்கு கொரியர் மூலம் அனுப்பி இருந்தார்களாம். அதை நிறுவனத்துக்கு சம்மந்தமில்லாத ரகு என்பவர் கையெழுத்து போட்டு வாங்கினாராம்.

அவர் இந்த நிறுவன ஊழியர் இல்லை என்பதும் சரிதா என்ற பெண் கொடுத்த ரெப்ரென்ஸ் மூலமே இப்படத்தில் சின்ன ரோல் நடித்தார். தற்போது இருவரையுமே காணவில்லை. 24 நிறுவனம் இருவர் மீது புகார் அளித்திருக்கும் நிலையில் இதுகுறித்த விசாரணை முடக்கி விடப்பட்டு இருக்கிறது.

தகவலின் படி, அந்த ஹார்ட் டிஸ்கில் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் அடங்கிய ஃபுட்டேஜ் இருப்பதாக கூறப்படுகிறது. இது வெளியானால் படத்தின் மொத்த உழைப்பும் முடிந்துவிடும் என்பதால் நிறுவனம் இந்த பிரச்னையை சைபர் கிரைமுக்கு கொண்டு சென்றுள்ளது.

தற்போது தெலுங்கு சினிமா வளர்ந்து வரும் சமயத்தில் இது போன்ற விஷயத்தால் அது மீண்டும் விழும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட ரகு மற்றும் சரிதா இருவரும் தற்போது தலைமறைவாகி இருப்பதால் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Published by
ராம் சுதன்