என்னையா பண்றீங்க...! மாநாட்டு திடலிலே அமர்ந்து கட்டிங்... விஜய் பேச்சை மதிக்காத நண்பாஸ்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:05  )

தமிழகத்தில் ஏற்கனவே பல கட்சிகள் இருக்கும் நிலையில் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார். இவர் கட்சி தொடங்கியது தமிழக அரசியலுக்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய கட்சியை தொடங்கிய விஜய் அதனை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் ரிஜிஸ்டர் செய்தார்.

அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார். இன்று பலரும் எதிர்பார்த்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி வி சாலையில் இந்த மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த பல தினங்களாக பார்த்து பார்த்து செய்யப்பட்டது.

மாநாட்டு திடலில் அம்பதாயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மாநாட்டை சிரமமின்றி மக்கள் காண்பதற்காக பல எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே செல்வதற்கு மூன்று வழிகளும் வெளியில் செல்வதற்கு பத்து வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு எந்தவித சிக்னல் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாடு திடலில் 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு, 17 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் தொண்டர்கள் சாப்பிடுவதற்கும் தனியாக இடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் ஏரியாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 152 பேருந்துகளும், 127 ஏக்கரில் வேன் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நேற்று இரவே கேரவன் மூலமாக மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். இரவு முழுவதும் கேரவனில் தான் தங்கி இருந்தார். கேரவனில் உள்ள தொலைக்காட்சி மூலமாக மாநாட்டு திடலில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பார்வையிட்டு வருகின்றார். மேலும் தொண்டர்களின் குறைகளையும் சரியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மூன்று நாட்களாக தொண்டர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. மது அருந்தி வரக்கூடாது. அப்படி மது அருந்திவிட்டு வந்தால் அவர்கள் உடனே வெளியேற்றப்படுவார்கள். மாநாட்டிற்கு மிகப் பாதுகாப்புடன் வர வேண்டும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறியிருந்தார்.

ஆனால் விஜயின் தொண்டர்கள் யாரும் அதனை மதிக்கவே இல்லை. மாநாட்டிற்கு வெளியே சிகரெட் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் மாநாட்டின் திடலில் அமைக்கப்பட்டுள்ள சேரில் அமர்ந்து சிலர் மது அருந்தும் வீடியோவும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த விஜயின் ரசிகர்கள் பலரும் அவர் கூறிய ஒரு விஷயங்களை கூட அவரின் தொண்டர்கள் பின்பற்றுவது இல்லை என்று கூறி வருகிறார்கள்.

Next Story