மருதநாயகம் அப்படிப்பட்டவரா? அதான் கமலே படம் எடுக்க நினைச்சாரா? வரலாற்று ஆய்வாளர் தகவல்

கமலின் கனவுப்படம் மருதநாயகம். இது வெளிவர இவ்வளவு தாமதமாவது ஏன்? எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கிருஷ்ணவேல் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
மருதநாயகம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த பனையூர்ல பிறந்ததாகச் சொல்வர். சின்ன வயசிலேயே பாண்டிச்சேரி போயிட்டாராம். அங்கு பிரெஞ்ச் மொழியைக் கத்துக்குறார். அங்கு ராணுவப்பயிற்சிகளும் எடுத்து வருகிறார். ஆற்காடு நவாபாக இருந்தவர் இறந்து விடுகிறார். அவரது தம்பியும், அவரது மகனும் அடுத்த நவாபாக ஆசைப்படுகிறார்.
அடையாறு யுத்தம்: இந்த நேரத்தில் தமிழகப் பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் போகவில்லை. நவாபோட தம்பி பிரெஞ்ச் வீரர்களோடு இணைகிறார். அவரது மகன் வாலாஜா பிரிட்டிஷ் அரசு கூட இணைகிறார். அப்போதுதான் அடையாறு யுத்தம் நடக்குது. வாலாஜாவோட படைகளை பிரெஞ்சு மன்னன் அடித்து விரட்டுகிறான்.
சென்னையே அவங்க கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அவரது தம்பி பிரிட்டிஷால் தோற்கடிக்கப்படுகிறார். அப்போது அந்தப் படைகளில் வேலை பார்த்த படைவீரருக்கு அடுத்த நிலையில் சுபேதாரராக இருப்பவர்தான் மருதநாயகம். அப்போ அவரது பெயர் யூசுப்கான். போரில் ஜெயிக்கிறார்.
யூசுப்கான்: அப்புறம் கேப்டன் பதவிக்கு வருகிறார். திருச்சியில நாயக்க மன்னர்களுக்கும் பிரிட்டிஷ்சுக்கும் சண்டை நடக்குது. அதுல யூசுப்கான் ஜெயிக்கிறார். அப்போ கமாண்டோ பதவி கிடைக்குது. பிரிட்டிஷ் அரசுல இந்தியன் ஒருவன் கமாண்டோ பதவிக்கு உயர்ந்தது என்றால் அது யூசுப் கான்தான்.அவரைப் பாராட்டலாம்.
வீரன் அழகுமுத்துக்கோனை தூக்கிலிட்டவர் இவர்தான். நெற்கட்டும் சேவல் பூலித்தேவரை விரட்டி விரட்டிக் கொன்னதும் இவர்தான். பாளையக்காரர்களின் எழுச்சியை ஒழித்துக் கட்டியது இவர்தான்.
கலர்புல் கதை: ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபையும், பிரிட்டிஷையுமே எதிர்த்து நான்தான் மதுரை சுல்தான் என்று சொல்லி விட்டார். அப்போது அவர் கான்சாகிபு என்று அழைக்கப்பட்டார். இவர் பிரெஞ்ச் லேடியைத் தான் கல்யாணம் செய்தார்.
இந்துவாக பிறந்து முஸ்லிமாக மாறி பிரெஞ்ச் படையில சேர்ந்து, பிரிட்டிஷ் படையில சேர்ந்து கலெக்டர் வரை டெவலப் பண்ணி பிரெஞ்ச் லேடியைக் கல்யாணம் செய்தார். அது கலர்புல்லா இருந்ததாலதான் கமல் எடுக்க நினைத்தார்.
அவரைப் பாராட்டுவதா, வெறுக்குறதான்னு தெரியல. சுதந்திரப்போராட்ட வீரர்களைக் கொன்னுட்டு, அதுக்காகவும் இவரே போராடி இருக்கிறார். கடைசியல இவரிடம் மந்திரியாக வேலைபார்த்த 3 பேர் காட்டிக் கொடுத்ததால்தான் தூக்கிலிடப்பட்டு இறந்தார். 3தடவை தூக்கிலிட்ட உடன்தான் இறந்தாராம்.
நல்லவரா கெட்டவரா?: அப்புறமும் உயிர் வந்துவிடக்கூடாதுன்னு உடலைத் தனித்தனியாக கூறு போட்டு பல்வேறு இடங்களில் கொண்டு போட்டார்களாம். யூசுப்கானைப் பொருத்தவரை நல்லவரா கெட்டவரான்னு கேட்டா தெரியலப்பான்னு தான் சொல்லணும். அதனாலதான் கமலே அந்தப் படத்தை எடுக்க நினைத்துள்ளார்னு சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.