விஜய்க்கும் பிரசாந்துக்கும் அப்படி ஒரு ஒற்றுமை... இயக்குனர் சொல்லும் சூப்பர் தகவல்

by sankaran v |
விஜய்க்கும் பிரசாந்துக்கும் அப்படி ஒரு ஒற்றுமை... இயக்குனர் சொல்லும் சூப்பர் தகவல்
X

இயக்குனர் வெங்கடேஷ் விஜயை வைத்து செல்வா படத்தையும், பிரசாந்தை வைத்து சாக்லெட் படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இந்த இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

எஸ்ஏ.சந்திரசேகர் சார்கிட்ட சினிமாவுல முதன்முதலா அசிஸ்டண்ட்டா சேரணும்னு போனேன். தேவைன்னா கூப்பிடுறேன்னாங்க. செல்வா பண்ணும்போது நல்ல ரிலேஷன்ஷிப் கிடைச்சது. பிரசாந்த் கூட சாக்லெட் படம் பண்ணினேன்.

விஜய், பிரசாந்த்: விஜய் சார் சூட்டிங் போறதுக்கு முன்னாடி 3 தடவை கதையைக் கேட்டுக்குவாரு. அவருக்கு லைட்டா சீனைப் பற்றிச் சொன்னா போதும். அவரு மைன்ட்ல அந்த சீன் இருக்குறதால ரெடியா ஆகிட்டுத்தான் வருவாரு. அதே மாதிரிதான் பிரசாந்த் சாரும். கதையை சொல்லும்போது திரைக்கதையை சொல்லி முடிப்பேன்.

நீங்க சொன்ன சீன்: நான் கொஞ்சம் பயப்படுவேன். ஐயோ இந்த சீன் வேறு ஏதாவது ஒரு படத்துல வந்துருக்குமோன்னு. அப்புறம் அவர் ஒரு நிமிஷம் சார். நாளைக்கு மீட் பண்ணுவோம்னு சொல்வாரு. மறுநாள் வரும்போது அந்த சீனைப் போட்டுக்காட்டி, நீங்க சொன்ன சீன் இதுல வந்துருக்கு சார். பாருங்கன்னு சொல்வாரு.

நல்ல நாலெட்ஜ்: அது வேற இது வேற சார்னு சொல்வேன். இருந்தாலும் சின்னதா கூட அதுமாதிரி வந்துடக்கூடாதுங்கறதுல தெளிவா இருப்பாரு. நல்ல நாலெட்ஜ் அவருக்கு. டெக்னிகலாகவே நல்ல நாலெட்ஜ் அவருக்கு உண்டு. நான்கூட தியாகராஜன் சார்கிட்ட கேட்பேன். அவரை ஒரு படம் டைரக்ட் பண்ண வைங்கன்னு. அவருக்கு அவ்ளோ டேலண்ட் இருக்கு. ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் உண்டுன்னு சொல்வேன்.

அப்பாதான் கெடுக்குறாரா?: நிறைய படிப்பாரு. நிறைய படம் பார்ப்பாரு. முழுமையான ஒரு கலைஞன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப ப்ரீயா பேசுவாரு. நான்கூட அவருக்கிட்ட கேட்டேன். இன்டஸ்ட்ரியில மட்டும் இல்ல. எல்லா இடத்துலயும் உங்க அப்பா தான் உங்களைக் கன்ட்ரோலா வச்சிருக்காரு. கெடுக்கறாருன்னு சொல்றாங்கன்னு கேட்டேன்.

பிரசாந்த் 'நச்' பதில்: அவரு ஒரு பதில் சொன்னாரு. 'எங்க அப்பா எப்படி சார் என்னைக் கெடுப்பாருன்னு. ஒரு அப்பா தன் பையனுக்கு நல்ல விஷயம்தான் நினைப்பாங்க. உலகம் ஆயிரம் சொல்லலாம் சார். எனக்கு அதைப் பற்றிக் கவலை கிடையாது. என்னைப் பொருத்த வரைக்கும் எங்க அப்பா என்ன செய்தாலும் சரியாகத் தான் சார் இருக்கும்'னு சொன்னாரு. அதைவிட சிறந்த பதில் இல்லை.

'சார் நீங்க சொன்னது பெரிய விஷயம்'னு சொன்னேன். அதையும் ஒரு புன்முறுவலா ஈசியா சிரிச்சிக்கிட்டே கடந்து போயிட்டாரு. இன்னைக்கு இருக்குற இளைஞர்களுக்கு எல்லாருக்குமே இந்தப் பதிலை அவங்கக்கிட்டக் கொண்டு போய் சேர்க்கணும்னு ஆசை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story