என்னது யேசுதாஸ்சுக்கு சங்கீதமே தெரியாதா? இது என்னடா புதுக்கதையா இருக்கு?

by sankaran v |
என்னது யேசுதாஸ்சுக்கு சங்கீதமே தெரியாதா? இது என்னடா புதுக்கதையா இருக்கு?
X

யேசுதாஸ் என்றாலே நமக்கு வெண்கலக்குரல் தான் நம் நினைவுக்கு வரும். அவரது பாடல்களில் அவ்வளவு ரம்மியம், நயம், இசை, சங்கீத ஞானம் இருக்கும். இன்னும் ஐயப்பன் கோவிலில் நடை சாத்துவது என்றால் ஹரிவராசனம் என்ற அவருடைய பாடல்தான் ஒலிபரப்பாகும்.

பல சூப்பர்ஹிட் பாடல்கள்: இவ்வளவுக்கும் அவர் ஒரு கிறிஸ்தவர். அப்படி இருந்தும் இசையில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் எம்மதமும் சம்மதம் என்று உயர்ந்த எண்ணத்துடன் பல சூப்பர்ஹிட் பக்திப்பாடல்களைப் பாடியுள்ளார். அதே சமயம் அவர் திரைத்துறையிலும் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களைக் கிறங்க வைத்துள்ளார்.

கண்ணே கலைமானே...: உதாரணத்திற்கு அவர் பாடிய கண்ணே கலைமானே பாடல் ஒன்று போதும். அவரது மொத்த பெருமையையும் எடுத்துச் சொல்ல. இப்போது கூட நீங்கள் மூன்றாம்பிறை படத்தில் அந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவ்வளவு ரசனையாக இருக்கும்.

இசை அறிவு: என்ன ஒரு அமைதி, ரம்மியம் என்று அவரது குரலில் அந்தப் பாட்டை நாம் கண்களை மூடிக் கொண்டு கேட்டால் மெய்மறக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானுக்கு சங்கீதமே தெரியாது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆனால் இது உண்மைதான். ஒரு காலத்தில் அவர் பாடகர் ஆவதற்கு பல கட்ட போராட்டங்களை சந்தித்துள்ளார். அவருக்கு எந்த இசை அறிவும் இல்லாமல் இருந்த காலம் அது. அந்த தருணத்தைப் பற்றி அவரே என்ன சொல்கிறார்னு பாருங்க.

பாடகரா வரணும்: என்னுடைய அப்பா வந்து நீ படிக்கலன்னா கூட பாட்டைப் படின்னு சொன்னதுதான் எனக்கு மறக்க முடியாது. ஸ்கூலைப் பத்தியோ, மார்க்கைப் பத்தியோ கவலைப்படாதேன்னாரு. அதுவும் கிறிஸ்டின் பேமிலில ஒரு ஆர்டிஸ்ட். என்னை பாடகரா வரணும்கறது ஆசை. வேற எதுவும் எனக்குத் தெரியாது. அண்ணா (எம்எஸ்வி.) சொல்வாரு.

இது சத்தியம்: எனக்கு ரேடியோ கூட டியூன் பண்ணத் தெரியாதுன்னு. அதே மாதிரி எனக்கு வேற எதுவும் தெரியாது. சங்கீதமும் தெரியாது. அதான் எனக்குச் சொல்லத் தெரியும். ஏன்னா ஒவ்வொரு நாளும் படிச்சிண்டே போகும்போது எனக்கு இன்னும் என்ன பண்ண முடியும்? காலங்கள் கழிஞ்சிண்டே இருக்கே. அந்தப் பயத்துனால சொல்றேன். இது சத்தியம்னு யேசுதாஸ் அப்போது சொல்கிறார்.

Next Story