Categories: latest news

சூர்யாவுக்கும் பாலாவுக்கும் என்னதான் பிரச்சனை? யார் மேல தப்பு? பிரபலம் சொல்ற தகவல்

நடிகர் சூர்யாவின் நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வந்து அவருக்கு ஒரு அபார வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த படம் நந்தா. இந்தப் படத்தை இயக்கியவர் பாலா.

இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் ஏற ஆரம்பித்தது. அந்த வகையில் தமிழ்த்திரை உலகில் சூர்யாவின் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருந்தவர் என்றால் அது இயக்குனர் பாலா தான். அதன்பிறகு வணங்கான் படத்திற்கும் சூர்யா ஒப்பந்தமானார்.

படத்திற்கான படப்பிடிப்புகளும் சிறிது நாள்கள் நடைபெற்ற நிலையில் திடீரென சூர்யா விலகினார். இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை. அப்போது படத்தைத் தயாரித்தவர் சூர்யா தான்.

இதற்காக பல கோடிகள் செலவு செய்த அவர் தன்னோட வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் பாலா என்பதால் அவருக்காக விட்டுக் கொடுத்தாராம். அதே போல வணங்கான் பட ஆடியோ லாஞ்சுக்கும் நேரில் சென்று பாலாவை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி உள்ளார் சூர்யா.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் என்னதான் பிரச்சனை? இருவரும் காம்ப்ரமைஸ் ஆன மாதிரியே தெரியலையே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.

நந்தா படத்தில் பாலாவின் இயக்கத்தில் பணியாற்றிய சூர்யா வேறு. வணங்கான் படத்தில் பாலாவின் இயக்கத்தில் பணியாற்றிய சூர்யா வேறு. என்னதான் சூர்யாவின் வளர்ச்சியில் பாலாவுக்கு பங்கு இருக்கிறது என்றாலும் அவரது வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு இயக்கி இருந்தாருன்னா அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்சனையே வந்துருக்காது அப்படிங்கறதுதான் என்னுடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2001ல் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் நந்தா. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து லைலா, ராஜ்கிரண், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு முன் நடித்த சூர்யாவை இயக்குனர் பாலா அப்படியே மாற்றி மாறுபட்ட ஒரு முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago