பன்முகத்திறன் கொண்ட பார்த்திபன் இதுவரை செய்யாத விஷயம்... ஏன்னு தெரியுமா?

by sankaran v |
பன்முகத்திறன் கொண்ட பார்த்திபன் இதுவரை செய்யாத விஷயம்... ஏன்னு தெரியுமா?
X

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பிற நடிகர்களைப் போல இல்லாமல் ரொம்பவும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர். அப்படியே தனது படங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவரது படங்களின் டைட்டிலே ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும். திரையுலகில் அவர் இயக்கிய முதல் படம் புதியபாதை. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தும் இருந்தார். படம் வேற லெவலில் ஹிட் ஆனது.

kudaikkul mazhai

அதே போல பொண்டாட்டி தேவை என்று ஒரு படம். மற்ற படங்களின் டைட்டில்களையும் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். புள்ள குட்டிக்காரன், உள்ளே வெளியே, இவன், ஹவுஸ்புல், குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இரவின் நிழல் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர் நடிப்பில் பாரதிகண்ணம்மா, நீ வருவாய் என, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் சூப்பர்ஹிட் ஆனது. இவர் எழுதிய கவிதைத் தொகுப்புக்கோ இவர் வைத்த பெயர் கிறுக்கல்கள்.

அப்படி என்றால் மனுஷன் எப்படி எப்படி எல்லாம் சிந்திக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவர் நடிகை சீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அந்தவகையில் புகழ்பெற்ற நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு நல்ல வசனகர்த்தா. அப்படி இருக்கும்போது அவருடைய படங்களையும் தாண்டி ஏன் வெளிப்படங்களுக்கு அவர் வசனம் எழுதுவதில்லை என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

பார்த்திபனைப் பொருத்தவரை அவர் கதை வசனகர்த்தாவாக மட்டும் இருந்தால் இன்றைக்கு குறைந்தது ஐந்தாறு படங்களுக்கு மட்டும் எழுதிக் கொண்டு இருப்பார். அவரைப் பொருத்தவரைக்கும் அவர் ஒரு பக்கம் இயக்குனர். இன்னொரு பக்கம் நடிகர்.

அவருடைய நடிகர், இயக்குனரோடு சம்பளத்தை ஒப்பிடும்போது திரைக்கதை வசனகர்த்தாவுக்குக் கிடைக்கிற சம்பளம் மிக மிகக் குறைவு. அதன் காரணமாகத் தான் அவர் வசனம் எழுதுகிற பணியைப் பல படங்களில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story