Categories: latest news

மணிரத்னம், ஷங்கர் படங்கள் இன்றைய இளைஞர்களைக் கவரலயே… இதுதான் காரணமா?

50 வயதைத் தாண்டிய இயக்குனர்கள் இன்றைக்கு உள்ள இளம் இயக்குனர்களிடம் போட்டிப் போட முடியவில்லை. அவர்களது படங்கள் எடுபடவில்லை. அதைத்தான் அன்று பிரபலமாக இருந்த மணிரத்னம், ஷங்கர் படங்களும் நிரூபித்துள்ளன. அந்த வகையில் இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

சேரன் தேசிய விருது பெற்றவர். அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை. அவரிடம் விஜய் சேதுபதி படம் பண்றேன்னு சொல்லி 2 வருடமா அலைக்கழிச்சிட்டாரு. அப்புறம் படம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதே மாதிரி கர்நாடகாவுல சுதீப் ஒரு வருஷம் சேரனோடு டிராவல் பண்ணிட்டு உங்களோட படம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு. இதுக்குக் காரணம் என்னன்னா அவரு 50 வயதையும் தாண்டிய இயக்குனர். இன்னைக்கு இருக்குற டிரெண்டிங் இயக்குனர்கள் மாதிரி அவங்க இல்ல. அவங்க சிந்தனைகள் எல்லாம் பழசா இருக்கு.

சொல்ல வர்ற கதை இன்னைக்கு டிரெண்டிங்குக்கு ஏத்த மாதிரி இருக்கான்னுதான் பார்க்கணும். அதுக்காக 50 வயதைத் தாண்டியவர்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இந்தியன் 2 படத்துக்கு துவங்கும்போது இருந்த ட்ரெண்டு அந்தப் படம் ரிலீஸ்சுக்கு அப்புறம் இல்ல. அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அதையும் மீறி அவங்க நினைச்ச மாதிரி எடுக்க முடியலன்னுதான் நினைச்சேன். ஆனா கேம் சேஞ்சரையும் அப்படி எடுத்தா விடுவாங்களா?

தக் லைஃப்ல சிக்குனவரு மணிரத்னம். இன்னைக்கு ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி படம் பண்ணலன்னு தான் விமர்சனம் வருது. கொஞ்சம் வயதானவர்களுக்குப் படம் பிடித்தது. ஆனா இளைஞர்களுக்குப் பிடிக்கலன்னா துரதிர்ஷ்டம்தான்.

லப்பர் பந்து படத்தை சிலாகிக்காத டைரக்டர்களே இல்லை. இந்தப் படத்தை இந்தி ரீமேக் வரை கொண்டு போறாங்க. அமீர்கான்கிட்ட இருந்து எல்லாம் பாராட்டு வருது. அவங்களுக்கு இந்தப் படத்தை எடுக்கும்போது அவங்களுக்கு ஜெயிச்சிடணும்கற நோக்கம் ஒண்ணுதான்.

ஆனா 50 வயதைத் தாண்டிய இயக்குனர்களின் நோக்கம் என்னன்னா இந்தப் படத்தை நல்லபடியாகத் தயாரித்து புரொடியூசரை சேஃப்டி பண்ணனும் என்பதாகத்தான் உள்ளது. அப்படின்னா கதையில் என்னவெல்லாம் ஜெயிக்கக்கூடிய அம்சங்கள் தேவையோ அதை எல்லாம் கலக்குறாங்க. அறிமுக இயக்குனரின் நோக்கம் வெற்றியாக மட்டுமே உள்ளது.

ஆனால் மணிரத்னம், ஷங்கர் மாதிரி இயக்குனர்கள் என்ன நினைக்கிறாங்கன்னா கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் அப்படிங்கற காம்போவுக்கு என்ன வேல்யு, அதுக்கான வியாபாரம் கிடைக்குமா என்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. ஆனால் கதை, அதுக்கு உள்ள இருக்குற விஷயம் இன்றைய இளைஞர்களைக் கவருமா என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகத் தான் உள்ளது.

அதுதான் இங்கே இருக்குற மிகப்பெரிய சிக்கல். தக் லைஃப் படத்துக்கு பர்ஸ்ட் காப்பிக்கு மட்டும் 150 கோடி, நான் தியேட்டரிக்கல் 230 கோடிக்கு மேல பிசினஸ் நடந்ததாம். ஆன் டேபிள் 70 கோடிக்கு மேல வந்துடுச்சு என்பதுதான் இப்போதைய தகவல். இதைக் கணக்குப் பண்ணியே படம் இயக்குவதால் இன்றைய இளைஞர்களைக் கவர முடியாத வகையில் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

31 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago