Categories: latest news

வேறு எந்த நடிகருக்கும் இல்லாத சிறப்பு பிரபுவிடம் இருக்காமே… அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

எந்தவித பந்தாவும் பண்ணாமல் கொடுத்த கேரக்டர்களுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்துக்கொடுப்பவர் பிரபு. அவரது படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமோ துளியும் இருக்காது. இது தாய்க்குலங்களை ஈர்த்தது. அதனால் அவரது படங்கள் என்றாலே பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் வந்துவிடும். அவரது படங்களில் ஒரு ஸ்பெஷல் உள்ளது. என்னன்னு பார்க்கலாமா…

இளையதிலகம் பிரபு படங்களை எடுத்துக் கொண்டால் டைட்டில்களில் ஒரே மாதிரியான பெயர்கள் தொடர்ந்து வரும். சின்னத்தம்பி பெரியதம்பி, சின்னவர், சின்ன மாப்ளேன்னு பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த மாதிரி வேறு யாராவது படங்களில் நடிச்சிருக்காங்களா? இதுல எந்தப் படம் வெள்ளி விழா ஓடியதுன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இது தான்…

ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட படங்களில் அதிகமா நடித்ததுன்னா அது பிரபு தான். அவர் நடித்த சின்னத்தம்பி பெரிய தம்பி உள்பட பல திரைப்படங்கள் வெற்றிகரமாக அமைந்தது. என்றாலும் சின்ன மாப்ளே படத்தின் வெற்றியை அந்தப் படங்கள் தொடவில்லை என்பது தான் உண்மை என்கிறார்.

சின்னத்தம்பி, சின்னப்பூவே மெல்லப்பேசு, சின்னவர், சின்ன வாத்தியார், சின்னத்தம்பி பெரியதம்பி ஆகியவை ஒரே மாதிரியாக அமைந்த பிரபுவின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1993ல் சந்தானபாரதியின் இயக்கத்தில் பிரபு நடித்த படம் சின்ன மாப்ளே. பிரபு, விசு, ராதாரவி, சுகன்யா, வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே பிரமாதம். வானம் வாழ்த்திட மேகம், வெண்ணிலவு கொதிப்பதென்ன, காட்டு குயில் பாட்டு, காதோரம் லோலாக்கு, கண்மணிக்குள் சின்ன சின்ன, அட மாமா நீ ஆகிய பாடல்கள் உள்ளன.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் பிரபு நடித்த சின்னதம்பி படமும் அதிக நாள்கள் ஓடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1991ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் சின்னத் தம்பி.

பிரபு, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். தூளியிலே, போவோமா, அட உச்சந்தல, குயிலப் புடிச்சி, அரைச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே ஆகிய பாடல்கள் உள்ளன.

ராம் சுதன்

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

8 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

8 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

8 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

12 hours ago