தீபாவளி ரேஸில் முதலிடம் இந்தப் படத்துக்குத் தானாம்.... பிரபலம் தகவல்

by ராம் சுதன் |

அந்தக் காலத்தில் தீபாவளிக்கு ஆண்டுதோறும் படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வந்ததுண்டு. ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு கவுண்டரில் டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பதற்குள் வியர்வையிலேயே குளித்துவிடுவார்கள். டிக்கெட் எடுத்து வந்ததும் சட்டையைக் கசக்கிப் பிழிந்து விட்டுத் தான் தியேட்டருக்குச் செல்வார்கள்.

அங்கு போய் தனக்குப் பிடித்த நாயகர்கள் திரையில் வரும்போது விசில் அடிப்பதும், கைதட்டுவதும் என்று தியேட்டரையே அதிர விடுவார்கள்.

இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலப் போய் சூடம் கொளுத்தி சாம்பிராணியும் போட்டுவிடுவார்கள். அது மறக்க முடியாத தீபாவளியாக அவர்களுக்கு அமைந்துவிடும். அந்த வகையில் இந்தத் தீபாவளிக்கு மூன்று படங்கள் மட்டுமே வந்துள்ளன.

சிவகார்த்திகேயன் நடிக்க உலகநாயகன் கமல் தயாரிக்கும் அமரன். இந்தப் படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையையே படமாக எடுத்துள்ளார்கள். ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி நடிக்க சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கும் பிரதர்ஸ். எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயின். சரண்யா பொன்வண்ணன், பூமிகா, நட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

கவின் நடிக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் படம் ப்ளடி பெக்கர். சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். ரெடின் கிங்ஸ்லி, பிருத்விராஜ், சுனில் சுகாடா ஆகியோரும் நடித்துள்ளனர். ஜேன் மார்டின் இசை அமைத்துள்ளார்.

அந்த வகையில் தீபாவளி படங்களில் உங்கள் சாய்ஸ் எது என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். நான் சின்ன வயதில் தீபாவளி என்றால் வெளியாகுற படங்களில் பாதிக்கும் மேல் பார்த்து விடுவேன்.

ஆனால் இப்போது அப்படி தியேட்டருக்குச் சென்று பார்ப்பதில்லை. இந்தத் தீபாவளிக்கு ரசிகர்கள் மத்தியில் முதலாவதாக அமரன் படத்திற்கு வரவேற்பு இருக்கும். இரண்டாவதாக ஜெயம் ரவி நடிக்கும் பிரதர்ஸ் படத்திற்கு இருக்கும்.

அடுத்ததாக கவின் நடிக்கும் ப்ளடி பெக்கர் படத்திற்கு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த வரிசை படங்கள் ரிலீஸான பிறகு மாறவும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story