1. Home
  2. Cinema News

பஞ்சாயத்தில் பராசக்தி டைட்டில்!.. உண்மையா படம் யாருக்கு சொந்தம்?.. பின்னணி இதோ..!


தமிழ் சினிமாவில் மிகவும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் படு பிஸியான நடிகராக மாறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் டைட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்து தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே25 திரைப்படத்திற்கு பராசக்தி என்கின்ற டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று இரவு நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் பராசக்தி திரைப்படத்தின் டைட்டிலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கருணாநிதி வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்தார்.

ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோகிய உரிமையை மட்டும் பெற்றிருந்தது. படத்தில் சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பதை மெய்யப்ப செட்டியார் ஆட்சேயபனை தெரிவித்த போது பெருமாள் முதலியார் தான் பிடிவாதமாக இருந்து சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைத்தார். சிவாஜி தன்னுடைய இறுதி காலம் வரையில் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்பதால் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் வேலூர் வந்து பெருமாள் முதலியார் இடம் ஆசிர்வாதம் பெற்று செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்படி எங்களின் தாத்தா உடைய பெருமைக்குரிய தயாரிப்புதான் பராசக்தி. இந்த திரைப்படத்தை விரைவில் நாங்கள் டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றோம். இதனால் இப்படத்தின் டைட்டில் உரிமை எங்களுடையது' என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பராசக்தி திரைப்படம் யாருடையது என்பது குறித்து சினிமா விமர்சகர்கள் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது 'பராசக்தி திரைப்படத்தை எடுத்தது நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெருமாள் முதலியார் என்பவர் தான். முதலில் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் சிவாஜியை பார்த்ததும், அவரின் தோற்றத்தை பார்த்துவிட்டு இவர் இந்த திரைப்படத்திற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.

ஆனால் பெருமாள் முதலியார் தான் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஒரு உதவியாளரை போட்டு நாடகம் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று சிவாஜிக்கு வேண்டும் என்கின்ற அனைத்தையும் வாங்கி கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதம் தயார் செய்து இருக்கிறார்கள். இரண்டு மாதம் கழித்து ஆளே மாறி வந்தாராம் சிவாஜி.

அதன் பிறகு தான் இந்த திரைப்படம் தொடங்கி எடுக்கப்பட்டது. இப்படம் மிகப்பெரிய ஹிட்டும் கொடுத்தது. ஆனால் அந்த காலத்திலேயே பெருமாள் முதலியார் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படத்தின் மொத்த ரைட்சையும் ஏவியம் நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார். அதனால்தான் தற்போது ஏவிஎம் நிறுவனம் பராசக்தி திரைப்படத்தின் டைட்டிலை கேட்கும் போது அந்த ரைட்சை தவான் பிக்சர் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.


ஆனால் தற்போது பெருமாள் முதலியார் குடும்பத்தில் இருப்பவர்கள் பராசக்தி திரைப்படம் எங்களுடையது, எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பராசக்தி திரைப்படம் வெளியாகி 75 ஆவது ஆண்டை கொண்டாடும் முயற்சியை ஏவிஎம் நிறுவனம் தான் முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் பராசக்தி திரைப்படத்தின் ரைட்ஸ் முழுவதும் ஏவிஎம் நிறுவனத்திற்கு தான் நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடையாது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.